ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 'அனபெல் சேதுபதி' ! ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

By manimegalai aFirst Published Aug 26, 2021, 6:54 PM IST
Highlights

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி முதல் முறையாக இணைந்து நடித்துள்ள 'அனபெல் சேதுபதி' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
 

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி முதல் முறையாக இணைந்து நடித்துள்ள 'அனபெல் சேதுபதி' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்காமல், தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வருபவர் விஜய் சேதுபதி. எனவே இவர் நடிக்கும் படங்கள் மீது ரசிகர்களுக்கு எப்போதுமே தனி எதிர்பார்ப்பு உண்டு. அதே போல், திரையுலகத்தில் ஒரு நிலையை இடத்தை அடைந்து விட்டால், இப்படித்தான் நடிப்பேன், இப்படி தான் இருப்பேன், என பில்ட் அப் பண்ணும் பிரபலங்கள் மத்தியில் ஒரு சாதாரண மனிதராக எப்போதும் போல் இருப்பது இவருடைய இயல்பான குணம் என்றே கூறலாம்.

தன்னுடைய நண்பர்களுக்காக சில படங்களில் சம்பளமே வாங்காமல் நடித்தும் கொடுப்பவர்.  அதே போல் ரசிகர்கள் மேல் பாசத்தை கட்டி அணைத்து முத்தம் மிட்டு பொழியும் பிரபலம். இந்நிலையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'லாபம்' படம் திரையரங்கில் வெளியாக உள்ளதாக நேற்று தகவல் வெளியான நிலையில், இன்று இவர் நடித்து முடித்துள்ள மற்றொரு திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் என்பவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள பீரியட் திரைப்படம் 'அனபெல் சேதுபதி'. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் இவருக்கு நாயகியாக நடித்துள்ள டாப்ஸி இருவருமே... இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சற்று முன்னர் வெளியான நிலையில், இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி, ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகை ராதிகா, யோகிபாபு, ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர், தேவதர்ஷினி, சேத்தன், சுரேகா வாணி, மதுமிதா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப்பின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, பாளரா கிஷோரை என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Makkal selvan & first look of horror- comedy .

It will stream from Sep 17th on pic.twitter.com/XLjjLfccUt

— Yuvraaj (@proyuvraaj)

click me!