என் உயிர்த் தோழன் பாபு கடந்த மாதம் உயிரிழந்த நிலையில், நேற்று அவரது தாயார் பிரேமாவும் மரணமடைந்துள்ளது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பாரதிராஜாவால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் பாபு. உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பாபுவை தான் இயக்கிய என் உயிர்த் தோழன் படம் மூலம் ஹீரோவாக்கி அழகுபார்த்தார் பாரதிராஜா. அப்படம் சொதப்பலாக இருந்தாலும் இளையராஜாவின் இசையில் அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானதோடு படத்தை வெற்றியடைய செய்தது. இதனால் அப்படமே பாபுவின் அடையாளமாக மாறியது.
என் உயிர்த் தோழன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பாபுவுக்கு கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்துள்ளன. அடுத்தடுத்து 10 படங்களில் அவர் கமிட் ஆனதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவர் மனசார வாழ்த்துங்களேன் என்கிற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தபோது சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு இருக்கிறது. அதில் மாடியிலிருந்து குதிக்கும்படியான காட்சி படமாக்கப்பட்டபோது, படக்குழு டூப் போட்டு அந்த காட்சியை எடுக்க திட்டமிட்டிருந்தார்களாம்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆனால் பாபு டூப் போட வேண்டாம் நானே நடிக்கிறேன் என சொல்லி நடித்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த பாபுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு முதுகு எலும்புகள் உடைந்தன. இதையடுத்து அறுவை சிகிச்சை செய்தும் அவரால் நிமிர்ந்துகூட உட்கார முடியவில்லை. இதனால் படுத்தபடுக்கையாகவே இருந்தார். கடந்த 1991-ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்துக்கு பின்னர் படுத்த படுக்கையாகவே இருந்தார் பாபு. அவரது தாயார் பிரேமா தான் பாபுவை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த மாதம் பாபுவின் உடல்நிலை மோசமடைந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகனின் இழப்பால் மனமுடைந்து அவரது தாயார் பிரேமா, சரியாக சாப்பிடாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது உடல்நிலையும் மோசமடைந்து நேற்று உயிரிழந்துள்ளார். மகன் இறந்த மூன்றே வாரத்தில் அவரது தாயும் இறந்தது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. என் உயிர்த் தோழன் பாபுவின் தாயார் பிரேமா, மறைந்த முன்னாள் சபாநாயகர் கே.ராஜாராமின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... குடும்பத்தின் பாசம்... எமோஷ்னல் டச்..!! மெலடியில் உருக வைக்கும் அன்பெனும் பாடல்! 'லியோ' மூன்றது பாடல் இதோ..