கோலிவுட் திரையுலகை கலங்க வைத்த அடுத்த மரணம்..! பிரபல நடிகர் கொரோனாவால் உயிரிழப்பு..!

Published : May 29, 2021, 10:45 AM IST
கோலிவுட் திரையுலகை கலங்க வைத்த அடுத்த மரணம்..! பிரபல நடிகர் கொரோனாவால் உயிரிழப்பு..!

சுருக்கம்

பிரபல நடிகர் வெங்கட் சுபா (60), கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 25 நாட்களாக அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.50 மணியளவில் உயிரிழந்தார்.  

பிரபல நடிகர் வெங்கட் சுபா (60), கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 25 நாட்களாக அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.50 மணியளவில் உயிரிழந்தார்.

கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலரை தாக்கி வருகிறது.  கடந்த சில மாதங்களாக, தமிழ்  திரையுலகை சேர்த்த பிரபலங்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும், ஒரு சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

அந்த வகையில் நேற்று இரவு, பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான வெங்கட் சுபா, தனியார் மருத்துவமனையில் காலமானார். 60 வயதாகும் வெங்கட் சுபா கொரோனா வைரஸால் பாதிக்கபட்டு, திடீர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சில வாரங்களுக்கு முன்பு, தயாரிப்பாளர் டி.சிவா தன்னுடைய நண்பர் வெங்கட் சுபாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல் நலமடைய பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொண்டார். 

ஆனால், துரதஷ்டவசமாக பிரபல தமிழ் நடிகரும், தயாரிப்பாளரும், எழுத்தாளருமான வெங்கட் சுபா, மே 29 ஆம் தேதி அதிகாலை 12.48 மணியளவில் உயிரிழந்தார். சென்னை கார்ப்பரேஷன் அதிகாரிகள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையில் அவரது உடல்  தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட் சுபா 'மொழி ', 'அழகிய தீயே ' மற்றும் 'கண்டா நாள் முதல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  மேலும் பல தமிழ் சீரியல்களிலும் நடித்துள்ளார். கடைசியாக ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா நடிப்பில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் 'ஃபிரன்ஷிப் ' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!
இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்