இளையராஜாவின் பாடலோடு இறுதி அஞ்சலி...! இறந்தவரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய நண்பர்கள்..!

Published : May 28, 2021, 07:47 PM IST
இளையராஜாவின் பாடலோடு இறுதி அஞ்சலி...! இறந்தவரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய நண்பர்கள்..!

சுருக்கம்

இந்நிலையில் இசைஞானி இளையராஜாவின், தீவிர ரசிகர் ஒருவர் தான் இறந்த பிறகு இளையராஜாவின் பாடலை பாடி தான், தன்னுடைய இறுதி அஞ்சலி நடைபெற வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரது ஆசை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ பதிவு ஒன்று வைரலாக சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.  

இளையராஜாவின் பாடல்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். காதல், சோகம், வேதனை, துக்கம் போன்ற பலரது கவலைகளை மறக்க வைப்பது ராஜாவின் இசை தான். அதே போல், பலரது இரவு நேர தாலாட்டும் ராஜாவின் இசை என்றே கூறலாம்.

இந்நிலையில் இசைஞானி இளையராஜாவின், தீவிர ரசிகர் ஒருவர் தான் இறந்த பிறகு இளையராஜாவின் பாடலை பாடி தான், தன்னுடைய இறுதி அஞ்சலி நடைபெற வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரது ஆசை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ பதிவு ஒன்று வைரலாக சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

மலேசியாவைச் சேர்ந்த இவர் இளையராஜாவின் தீவிர ரசிகர் இவர் தனது நண்பர்களிடம், நான் இறந்த பிறகு கண்டிப்பாக இளையராஜாவின் பாடல்களை பாடி தான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்றும், இதுவே தனது கடைசி ஆசையை கூறியுள்ளார். 

இந்த நிலையில் அவர் சமீபத்தில் இறந்த நிலையில்... அவரது ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக அவரது நண்பர்கள், இளையராஜாவின் 'இளமை என்னும் பூங்காற்று' என்கிற பாடலை பாடி அவருக்கு இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளனர். அனைவரும் சமூக இடைவெளியோடு பாடுவதும், ஒருவர் இசை இசையமைப்பதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சி பார்வைபர்களையே நெகிழ வைத்துள்ளது.... 

அந்த வீடியோ இதோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!