‘நீ சமுத்திரம்’... வைரமுத்துவிற்கு ஆதரவாக கொந்தளித்த பாரதிராஜா...!

manimegalai a   | Asianet News
Published : May 28, 2021, 08:26 PM IST
‘நீ சமுத்திரம்’... வைரமுத்துவிற்கு ஆதரவாக கொந்தளித்த பாரதிராஜா...!

சுருக்கம்

வைரமுத்துவுக்கு ஓ.என்.வி விருது வழங்குவது குறித்து பரீலிக்கப்படும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்துவிற்கு கேளராவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும்,  ஓ.என்.வி. இலக்கிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில், பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவருக்கு இந்த விருது கொடுக்கப்படுவதாக, கேரள நடிகை பார்வதி, மற்றும் பாடகி ஆகியோர் விமர்சிக்க சமூக வலைத்தளங்களில் விமர்சித்திருந்தனர். இதை தொடர்ந்து அந்த அமைப்பு வைரமுத்துவுக்கு ஓ.என்.வி விருது வழங்குவது குறித்து பரீலிக்கப்படும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

 வைரமுத்துவிற்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

வணக்கம்..

 என் படைப்புகளில் 

முன் கதை  

பின் கதை கதாபாத்திரங்களின் உணர்வுகளை 

பாடல்களில் வார்த்தைகளை அடக்கி ஆளத்தெரிந்த ஒரு

கவிஞனை தேடி அலைந்து கொண்டிருந்த நேரம்.

 சங்கம் வளர்த்த  

நம் முன்னோர்களின்

 வழித் தோன்றல்களாக 

மெய்ஞானம் அறிந்த

 விஞ்ஞானக் கவிஞனை

 கண்டெடுத்து

 ஒருப் பொன் மாலைப் பொழுதில் விதைத்தோம்..

 வார்த்தை கவிதை 

வரிகள் காவியம்..

வியப்பு..!

 இரண்டு வரிகளின்

இடைவெளி கதை

 சொல்கிறது..

வார்த்தை புதிது

 வரிகள் புதிது

 என் தாய் மொழி புதிதாக உணர்ந்தேன்...

அரை நூற்றாண்டு

அருகில் நிற்கிறோம்

என் கவிஞனை

திரும்பிப் பார்க்கிறேன்.

வில்லோடு வா நிலவே

கருவாச்சி காவியம்

கள்ளிக்காட்டு இதிகாசம்

தண்ணீர் தேசம்

மூன்றாம் உலகப் போர்..

 பத்மஸ்ரீ

 பத்மபூசன்  

சாகித்ய அகாதமி 

ஏழு தேசிய விருது

 எண்ணற்ற படைப்புகள்

எண்ணற்ற விருதுகள்..

விருட்சமாய் என் தமிழ்

உயர்ந்து நிற்கிறது.

 கர்வம் கொள்கிறேன்.

 கேரளச் சகோதரர்களின்

பேரன்பினால்.. மலையாள இலக்கியத்தின் உயரிய விருதான ஓ.என்.வி, எங்கள் கவிப்பேரரசு அவர்களுக்கு அறிவித்தது அறிந்து மகிழ்வுற்றேன்.. 

ஆனால் அரசியல் நெருக்கடியால் மறுபரிசீலனை என தற்போது செய்திகள் வந்திருப்பதை கண்டு வருத்தம் சிறிதளவும் இல்லை. சமீபகாலமாக  எம் இனத்தின் மீதும் மொழி மீதும் அரசியல் காழ்புணர்ச்சி கொண்டு எங்கிருந்தோ தனிமனித மாண்பிற்கு களங்கத்தை ஏற்படுத்தும்விதமாக சில நபர்களை கொண்டு மதம், இனம், மொழியாக பிரிவினை ஏற்படுத்தும் விதமாக அறிவிக்கப் பட இயலாத போரினை தொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களாகிய நாம் ஒற்றுமையுடன் இருந்து முறியடிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

உலகத்தமிழர்களின் நெஞ்சங்களில் கவிப்பேரசு என்கிற பட்டம் சூட்டி கம்பீரமாக நிற்கும் கவிஞனே உன்னை அசைத்துப் பார்த்துவிடலாம் என்பது வெறும் கனவாகவே இருக்கும், தமிழர்களுக்கு என்றும் உறுதுணையாக மாண்புமிகு தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர். மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

'இந்த குளத்தில் கல்லெரிந்தவர்கள்"  எறியட்டும்  அவர்களின் தாகம் தீரட்டும்.

 குளம் என்பது  கானல் நீர்,  நீ சமுத்திரம் என குறிப்பிட்டுள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Actress Urvashi : மகளுடன் கமலை சந்தித்த ஊர்வசி! அம்மாவின் அழகை மிஞ்சும் மகளின் ப்யூட்டிபுள் போட்டோஸ்
Dhanush Net Worth : விளம்பரத்திற்கே கோடிகளில் சம்பளம்.. வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர வீடு, கார்கள்.. தனுஷின் சொத்து மதிப்பு இவ்வளவா?