நடிகர் சார்லிக்கு மகனுக்கு கோலாகலமாக நடந்து முடிந்தது திருமணம்! பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

Published : Sep 01, 2019, 05:12 PM IST
நடிகர் சார்லிக்கு மகனுக்கு கோலாகலமாக நடந்து முடிந்தது திருமணம்! பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

சுருக்கம்

பிரபல நடிகர் சார்லியின் மகன் ஆதித்யாவிற்கும் - அமிர்தா என்கிற பெண்ணிற்கும், இன்று சென்னையில் உள்ள பிரபல திருமண மண்டபத்தில், கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. இதில் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.  

தமிழ்சினிமாவில் ஏறக்குறைய 800 க்கும் அதிகமான படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் சார்லி. தன்னுடைய தனித்தன்மையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தவர்.

குறிப்பாக விஜய், அஜித், கமல், ரஜினி, என பல முன்னணி நடிகர்கள் படங்களில் இவரை அதிக அளவு முடியும். இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'பொய்க்கால் குதிரை' படத்தின் மூலம் ஆரம்பமான சினிமா பயணம், இன்று வரை தொடர்ந்து வருகிறது.

மேலும் கடந்த சில வருடங்களாக, கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில்  இவருடைய மகன் ஆதிதியாவிற்கும் , அமிர்தா என்கிற பெண்ணுக்கும் இன்று சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.

இவர்களுடைய திருமணத்தில், தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகை சரண்யா பொன்வண்ணன், பொன்வண்ணன், ராதாரவி, செந்தில், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சார்லியின் ரசிகர்களும் தொடர்ந்து அவருடைய மகனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!