
பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் நடிகை கஸ்தூரி வெளியேறினார். அதே நேரத்தில் இந்த வாரம் எவிக்ஷன் இருக்காது என்பதையும் உறுதி செய்தார் கமல். ஆனால் இந்த விஷயம் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்சுக்கு தெரியாது.
எனினும் இன்றைய தினம், எவிக்ஷன் இருப்பது போன்றே காட்டி கொண்டார் கமல். இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் இடம் பிடித்துள்ள நான்கு நபர்களில், ஷெரினும் மற்றும் முகினும் காப்பாற்றப்படுகின்றனர் என அறிவித்தார். இதனால் கவின், வனிதா ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவார்களோ? என்ற எண்ணம் இருவருக்குமே இருந்தது.
இதனையடுத்து இதுவரை இல்லாமல், முதல் முறையாக கமலுக்கே ஒரு குறும்படம் காண்பிக்கப்படுவது மக்கள் மற்றும் ரசிகர்கள் யாரும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது.
அதனையடுத்து மீண்டும் தொடங்கிய எவிக்சன் படலத்தில் கவின் காப்பாற்றப்படுவதாக அறிவித்த கமல் அதன்பின்னர் இந்த வாரம் எவிக்சன் இல்லை என்பதை சொல்கிறார். இதனால் ஒருசிலருக்கு மகிழ்ச்சியும் ஒருசிலருக்கு ஏமாற்றமும் ஏற்பட்டதை அவர்களுடைய முக பாவனைகளை வைத்து புரிந்து கொள்ளமுடிந்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.