
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுக்க பெரிதாக எந்த சண்டை சச்சரவும், இல்லாமல் சென்றது. இதற்கு காரணம் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் சண்டை போடும் நேரத்தில், அவரவருக்கு கொடுத்த கிராமத்து கலைகளை எப்படி சிறப்பாக செய்வது என கவனம் செலுத்தி வந்தது தான்.
ஆனால், இந்த வாரம் போட்டியாளர்களுக்குள் எதிர்பார்த்ததை விட பிரச்சனைகளும், சண்டைகளும் சூடு பிடிக்கும் என தோன்றுகிறது. குறிப்பாக லாஸ்லியா - கவினுக்குள் சண்டை வரலாம். அதற்க்கு ஏற்றாப்போல் ஒரு கேள்வியை கேட்டு, லாஸ்லியாவை அனைவர் மத்தியிலும் அழ வைத்துள்ளார் ஒரு பெண்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், லாஸ்லியாவிடம் போன் காலில் பெண் ஒருவர் பேசுகிறார். "அவர் லாஸ்லியா உங்கள் மீது சேரன் உண்மையான அன்பு வைத்திருக்கிறார். நீங்களும் அன்பு வைத்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். அப்படி இருக்கும் போது, கவின் சேரன் டிராமா செய்கிறார் என கூறியபோது, ஏன் நீங்கள் சேரனுக்கு சப்போர்ட்டாக பேசவில்லை என கேட்டு அசிங்கப்படுத்துகிறார்.
இதற்கு லாஸ்லியா நான் எந்த அளவிற்கு உண்மையாக இருக்கிறேன் என்பது எனக்கு தெரியும். அதை யாரிடமும் சொல்லி புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி அழுது சமாளிக்கிறார். இந்த கேள்வியால் எப்படியும் இந்த வாரம் கவினுக்கும், லாஸ்லியாவிற்கும் சில பிரச்சனைகள் வெடிக்க வாய்ப்பு உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.