நடிகை ஊர்வசி பற்றி யாருக்கும் தெரியாத உண்மையை போட்டுடைத்த முன்னாள் கணவர் மனோஜ் கே ஜெயன்...!

Published : Aug 31, 2019, 07:59 PM ISTUpdated : Aug 31, 2019, 08:02 PM IST
நடிகை ஊர்வசி பற்றி யாருக்கும் தெரியாத உண்மையை போட்டுடைத்த முன்னாள்  கணவர் மனோஜ் கே ஜெயன்...!

சுருக்கம்

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த ஊர்வசிக்கும்  மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயனுக்கும் கடந்த 2000 ஆண்டு திருமணம் நடைபெற்றது.

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த ஊர்வசிக்கும் மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயனுக்கும் கடந்த 2000 ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 2008 ஆம் ஆண்டு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர் இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மறுமணமும் செய்து கொண்டனர்.

மனோஜ் கே ஜெயன் ஆஷா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஊர்வசியும் மறுமணம் செய்து அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் தன்னுடைய குடும்ப வாழ்க்கை பற்றி கருத்து தெரிவித்து இருந்த மனோஜ் கே ஜெயன் அவர் மனதில் பட்டதை பளிச்சென போட்டு உடைத்துள்ளார்.

அப்போது..."ஊர்வசி மீது எனக்கு எப்போதும் பகை உணர்வே கிடையாது... அதே சமயத்தில் அவரை எதிரியாக பார்த்ததே கிடையாது... அவ்வப்போது ஊர்வசியின் மகன் எனது மகளை பார்க்க ஆசைப்படுவதாக தெரிவிப்பார். உடனே சென்று பார்த்து வருமாறு தன் மகளிடம் தெரிவித்து அனுப்பி வைப்பேன். ஆனால் என்னை யாராவது எதிரியாக நினைத்தால் அதை பற்றி எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை.

குடும்ப வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்? எப்படி வாழ வேண்டும்? என்பது பற்றி எனது மனைவி ஆஷா தெரிவித்துள்ளார். தொடர்ந்து என் மீது ஆதீத அன்பு செலுத்துகிறார்.. என்னை மிகவும் நேசிக்கிறார். என் குடும்பத்தையும் நேசிக்கிறார் .என் வாழ்க்கையில் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.. என தெரிவித்து உள்ளார் மனோஜ் கே ஜெயன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!