ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட பப்பி லஹிரியின் உடலுக்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் பவன் ஹன்ஸ் மயானத்தில் பப்பி லஹிரியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
பிரபல பாலிவுட் திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹரி (Bappi Lahiri) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். செல்லமாக பாப்பி டா என்று அழைக்கப்படும் இவர், பாலிவுட்டில் டிஸ்கோ டான்சர், ஹிம்மத்வாலா, ஷராபி, அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டார்ஜான், ஆஜ் கே ஷஹேன்ஷா, தானேதார், நம்பி ஆத்மி, ஷோலா அவுர் ஷப்னம், டான்ஸ் டான்ஸ், சத்யமேவ் ஜெயதே, கமாண்டோ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழிலும் இவர் பாடும் வானம் பாடி என்கிற படத்துக்கு இசையமைத்துள்ளார்.
undefined
கடந்த ஆண்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பப்பி லஹரி (Bappi lahiri). கொரோனாவில் இருந்து மீண்டாலும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டார்.
உடல் நலக்குறைவு காரணமாக பப்பி லஹிரி (Bappi lahiri) கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமையன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் செவ்வாய்க்கிழமை அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததால், அவரை மறுபடியும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு பாலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அவரது மகன் பப்பா லஹிரி அமெரிக்காவில் இருந்து நேற்று இரவு மும்பை வந்தார். இதையடுத்து இன்று காலை 10 மணியளவில் பப்பி லஹிரியின் இறுதிச்சடங்கு தொடங்கியது. ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட பப்பி லஹிரியின் உடலுக்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் பவன் ஹன்ஸ் மயானத்தில் பப்பி லஹிரியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்.... Bappi lahiri : ‘பாடும் வானம்பாடி‘ மறைந்தது! தமிழிலும் முத்திரை பதித்த இசைக் கலைஞன் பப்பி லஹிரியின் இசைப் பயணம்