இந்த அஜித்தை குடும்பம் குடும்பமாக வந்து ரசிப்பார்கள்... கலக்கல் மேட்டரை அவிழ்த்து விட்ட கலை இயக்குனர்!!

Published : Jan 05, 2019, 12:45 PM ISTUpdated : Jan 05, 2019, 12:46 PM IST
இந்த அஜித்தை குடும்பம் குடும்பமாக வந்து ரசிப்பார்கள்...  கலக்கல் மேட்டரை அவிழ்த்து விட்ட கலை இயக்குனர்!!

சுருக்கம்

ரசிகர்களையும் தாண்டி இந்த படம் குடும்பத்தினர் கொண்டாடும் வகையில் வந்திருக்கிறதாம் அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம்.

ஜனவரி 10, 2019 அன்று உலகமெங்கும் வெளியாக இருக்கிறது அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் . சமீபத்தில் வெளியான ட்ரைலரில் இருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றது. அது ட்ரெய்லருக்கு கிடைத்துள்ள பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்தே சொல்லலாம். படத்தின்மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பாள் முதல் நாள் ரசிகர்கள் காட்சி டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்து விட்டதாம். ரசிகர்களையும் தாண்டி இந்த படம் குடும்பத்தினர் கொண்டாடும் வகையில் வந்திருக்கிறதாம்.

விஸ்வாசம் டிரெய்லரில் அஜித்தின் ஆளுமைக்கு கூடுதல் அழகு சேர்த்தது என்றால் வண்ணமயமான கலை, மாயாஜால ஒளிப்பதிவு மற்றும் கச்சிதமான எடிட்டிங் போன்ற முக்கிய தூண்கள். அவர்கள் படத்தை பற்றி சில அம்சங்களை கூறுகிறார்கள்.

கலை இயக்குநர் மிலன் விஸ்வாசத்தில் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி கூறும்போது, “விஸ்வாசத்தில் பணிபுரிந்தது ஒரு தனித்துவமான மற்றும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது, இயக்குமர் சிவா இங்கு வித்தியாசமான ஒன்றை முயற்சித்ததாக நான் கூறுவேன். 

படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் காட்சி விளம்பரங்களில் என் கலை அமைப்பு மிகவும் வண்ணமயமாக இருந்ததாக அனைவரும் பாராட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. 

சத்யஜோதி ஃபிலிம்ஸ் வழங்கிய படைப்பு சுதந்திரம் தான் இத்தனைக்கும் காரணமாக இருந்தது என்பதை நான் ஒப்பு கொள்கிறேன். நிச்சயமாக, ஒளிப்பதிவாளர் வெற்றியின் மாயாஜாலம் இல்லாமல் இது சாத்தியமில்லை” என்றார். அஜித்குமார் பற்றி மிலன் பேசும் போது, “அஜித் சாரின் மாஸ் அவதாரத்தை தாண்டி சில விஷயங்களை டிரெய்லரில் பார்த்திருக்கிறோம். படம் வெளி வரும் போது குடும்பம் குடும்பமாக அவரை ரசிப்பார்கள் ” என்றார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?