
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கல் விருந்தாக வரும் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதேபோல பேட்ட படமும் அதே தேதியில் வெளியாக உள்ளது.
அஜித், ரஜினி இந்த இரண்டுபேரில் யார் வசூல் மன்னனாக திரையுலகில் காட்டிக் கொள்ளப்போகிறார்கள் என ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த கோடம்பாக்கமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.
விஸ்வாசம் ஆரம்பிக்கும்போதே பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு சொன்னது ஆனால், பேட்ட படம் தன்னுடைய அதிகார பலத்தால் விஸ்வாசம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது தெரிந்தும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ரஜினி படம் பெரிய பேனர் என்பதால் விஸ்வாசம் தள்ளிப்போகும் என எதிர்பார்த்தது பேட்ட டீம். ஆனால் அஜித் படக்குழுவோ யார் படம் வேணும்னாலும் வரட்டும் நம்ம படம் தான் களத்துல மிரட்டும் என தில்லாக போட்டிக்கு நின்றது விஸ்வாசம்.
பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களுக்கான தியேட்டர் புக்கிங்குகளுக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும்போட்டி ஏற்பட ஆரம்பித்தது, இதனால் தியேட்டர் அட்வான்ஸ் கிடைப்பதில் பல சிரமங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து, சன் பிக்சர்ஸ் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவியிடம் விநியோக உரிமையை கொடுத்தது.
இதனால், முந்திக்கொண்ட கேஜேஆர் நிறுவனம் பெரிய பெரிய சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களை விஸ்வாசம் படத்திற்கு பிடித்தது. ஆனால், சன்பிக்சர்ஸ், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் போட்டிபோட்டுக் கொண்டு பெரும்பாலான திரையரங்குகளை ரஜினியின் பேட்ட பிடித்துவிட்டதாக தெரிகிறது. தமிழகத்தில் உள்ள 1130 தியேட்டர்களில் இன்றைய நிலவரப்படி ‘பேட்ட’ படம் சுமார் 600 முதல் 650 தியேட்டர்களிலும், ‘விஸ்வாசம்’ சுமார் 500 முதல் 550 அதிகார பலத்தால் பிடித்தது.
இருந்தாலும் வெளிநாட்டில் இருக்கும் ஒரு திரையரங்கில் பேட்ட படத்தின் பேனர் கீழே வைக்கப்பட்டுள்ளது. விஸ்வாசம் படத்தின் பேனர் மிகப்பெரியதாக மேலே வைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டோவை பார்த்த தல ரசிகர்கள் அதிகாரமும் அடக்குமுறையும் வெளிநாட்டில் செல்லாது இது தல பொங்கல் என பயங்கர குஷியாகியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.