
‘சர்கார்’ வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகவும் ரசிகர்களிடம் அதிகமாக ஆகியுள்ளது காரணம் அட்லீ கூட்டணி அதோடு இதுவரை படத்தை பற்றிய வந்த செய்திகள், இப்படம் குறித்து இதுவரை வெளிவராத அதுவும் ரொம்பவே ஸ்பெஷலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
விஜயின் 63 வது படமாக உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து படத்தை எடுக்கிறாராம் அட்லி.
மேலும், தமிழ் சினிமாவில் முதல் முறையாக 16 மாடல் அழகிகள் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்களாம், விஜயிடம் பயிற்சி பெறும் கால்பந்தாட்ட அணியில் விளையாடும் 16 பெண்களும் விளையாட்டு வீரர்களாக இருப்பதோடு, இப்படத்தின் மூலம் தான் சினிமாவிலும் அறிமுகமாகிறார்களாம். அந்த 16 பேருக்கு பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய், அவரது கதாபாத்திர பெயர் குரு என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் இந்த படத்தின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிட்டது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.