அர்ஜுன் தாஸ் - ஃபஹத் ஃபாசில் காம்போவில் உருவாகும் 'டார்பிடோ'!

Published : May 05, 2025, 04:49 PM IST
அர்ஜுன் தாஸ் - ஃபஹத் ஃபாசில் காம்போவில் உருவாகும் 'டார்பிடோ'!

சுருக்கம்

 Fahadh Faasil and Arjun Das, will begin filming by the end of this year: 'துடரம்' படத்தின் இயக்குனர், தருண் மூர்த்தி இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் மற்றும் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படம் 'டார்பிடோ'. இந்த படம் பற்றிய தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

 Director Tharun Moorthy confirms that the gripping thriller ‘Torpedo':

மலையாள இயக்குனரான தருண் மூர்த்தி இயக்கத்தில், மோகன்லால் நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன திரைப்படம் 'துடரம்'. திரையரங்குகளில் அமோகமாக வரவேற்பை பெற்ற, இந்த திரைப்படத்தை தமிழிலும் டப்பிங் செய்து, மே 9 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

புதிய படத்தின் அறிவிப்பு:

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தருண் மூர்த்தி இயக்க உள்ள படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் மற்றும் படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஃபஹத் ஃபாசில் மற்றும் அர்ஜுன் தாஸ்:

தனது புதிய படம் குறித்து, அண்மையில் கூறியுள்ள தருண் மூர்த்தி,  “தனது அடுத்த படத்தில் ஃபஹத் ஃபாசில் மற்றும் அர்ஜுன் தாஸ் என இரண்டு ஹீரோக்கள் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.  இந்த படத்திற்கு 'டார்பிடோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாக உள்ளது.

 சுஷின் ஷியாம் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்க, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். விவேக் ஹர்ஷன் ஒளிப்பதிவு செய்ய, ஆஷிக் உஸ்மான் தயாரிக்க உள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழிலும் பிசியாகிய ஃபஹத் ஃபாசில்: 

இவர் இயக்கத்தில் வெளியான 'துடரம்' திரைப்படம் ஒன்பது நாட்களில் ₹ 130 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. எனவே ஃபஹத் பாசிலுடன் இவர் இணைய உள்ள படம் மீது அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஃபஹத் மலையாள திரையுலகை தவிர தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் படு பிஸியான நடிகராக உள்ளார். தமிழில் இவர் வடிவேலுவுடன் நடித்து முடித்துள்ள 'மாரீசன்' திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. அதே போல், இவர் நடித்து கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 திரைப்படம் ரூ.1800 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுத சரவணன் : கூலா வேடிக்கை பார்த்த மயில்!
டபுள் எவிக்‌ஷன்... பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் காலியாகப்போகும் 2 விக்கெட் யார்?