பொன்னி நதி பாக்கணுமே பாடலுக்கு அழகான விளக்கம் கொடுத்த ஆர்ஜே அஞ்சனா...வைரல் பதிவு இதோ..

By Kanmani P  |  First Published Oct 4, 2022, 11:44 AM IST

இந்த படத்தின் முதல் பாடலாக வெளியான பொன்னி நதி பாடலின் சில வரிகள் குறித்து ஆர் ஜே அஞ்சனா விளக்கம் தந்திருப்பது நெட்டிஷன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது


மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்படு வருகிறது. நம்ம ஊர் நாயகர்கள், நாயகிகள் சோழ வம்ச அரசர்களாகவும் இளவரசிகளாகவும் வந்து மிகப்பெரிய பாராட்டுகளை பெற்று வருகின்றனர். ஜெயம் ரவி, திரிஷா,கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ்  என  நட்சத்திரபட்டாளமே குழுமியுள்ளது.  தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம்என பான் இந்தியா படமாக  உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. சில நாட்களிலேயே இந்த படம் ரூ. 250 கோடிகளுக்கு மேல் வசூலை குவித்து விட்டது. 

கல்கி கிருஷ்ணனின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாகியுள்ள இந்த படம் உலக ரசிகர்களின்  கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த படத்தின் முதல் பாடலாக வெளியான பொன்னி நதி பாடலின் சில வரிகள் குறித்து ஆர் ஜே அஞ்சனா விளக்கம் தந்திருப்பது நெட்டிஷன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. படம் வெளியான நாள் முதலே சோழ வம்சத்தின் பேச்சு தான் சமூக ஊடகம் முழுவதும்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு....பிக் பாஸ் சீசன் 6 பைனல் லிஸ்ட் இதோ? யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா

ராஜராஜன் சோழன் குறித்தும் அவரது வாழ்க்கை பதிவுகள் குறித்தும் வீடியோக்களும் ரீல்ஸுகளும் தொடர்ந்து வெளியான வண்ணம் தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஆர் ஜே அஞ்சனா என்பவர் பொன்னி நதி பாடலில் "ஈ ஆரி எச மாரி" என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொல்லி உள்ளார். ஈ என்றால் வில், ஆரி என்றால் வீரன், எச என்றால் இசை, மாரி என்றால் மழை அதாவது  "வில் வீரனின் இசை மழை" என விளக்கம் கொடுத்துள்ளார். 

மேலும் செய்திகளுக்கு....பல்கலை கழகத்தில் சாமி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரஷ்மிகா... படு ஜோராக நடக்கும் 'குட் பை' பட புரமோஷன்!

click me!