EnnaSollaPogirai release date : வலிமையால் பிழைத்த அஸ்வின்..ஒரு வழியாக விமோசனம் கிடைச்சிருச்சு...

Kanmani P   | Asianet News
Published : Jan 11, 2022, 01:37 PM IST
EnnaSollaPogirai release date : வலிமையால் பிழைத்த அஸ்வின்..ஒரு வழியாக விமோசனம் கிடைச்சிருச்சு...

சுருக்கம்

EnnaSollaPogirai release date : அஸ்வினின் துடுக்கான பேச்சால் சிக்கலை சத்தித்த என்ன சொல்ல போகிறாய் படம் வரும்  ஜனவரி 13-ம் தேதி ரிலீஸ் ஆகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியான குக் விதி கோமாளி என்ற  சமையல் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஸ்வின் என்கின்ற அஸ்வின் குமார். இதற்கு முன்பாக சில குறும் படங்களிலும் அவர் நடித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் நுழைய வேண்டும்  என்ற கனவில் இருந்து வந்த அவர்  பிரபலத்திற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார். அதில் தனக்கு இருந்த சமையல் திறமையின் மூலமாகவும், பவ்யமான பையன் போன்ற தனது தோற்றத்தாலும் ரசிகர்கள் பலரால் விரும்பப்பட்டு வந்தார் அவர்.

பின்னர் ஒருசில நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்ட பாடல்கள் மூலம் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு கூடியது. இதையடுத்து புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வந்தார் அஸ்வின். அவர் நடித்துள்ள என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு அவர் பேசிய எல்லையை மீறி பேச்சுக்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

ஒரே நிகழ்ச்சியில் நான்கு விஜய், ஆறு ரஜினிகாந்த் போல அவர் சுய பெருமை  பேசியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவரின் பேச்சு அவரின் வாழ்வில் இவ்வளவு பெரிய எதிர்மறை ஏற்படுத்துமா என்று அவரே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், எனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கிவிடுவேன் அதுபோல 40 கதைகள் கேட்டு எல்லாவற்றிலும் நான் தூங்கிவிட்டேன் எனக்கூறி  மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி கொண்டார். இதனால் என்ன சொல்லப்போகிறாய் பட வெளியீட்டை பிப்ரவரிக்கு தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் ஒத்தி வைப்பதாக அறிவித்தார். 

இதற்கிடையே மீண்டும் அதிகரித்த கொரோனா தோற்றால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமா என்ன சொல்ல போகிறாய் படத்தை OTT-ல் வெளியிட தயாரிப்பு நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது.

இதற்கிடையே பிரமாண்ட படைப்புகளான ஆர்ஆர்ஆர், வலிமை , ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் ஜனவரி வெளியீட்டிலிருந்து ஒதுங்கி விட்டன. இந்த தருணத்தை சிறு பட்ஜெட் படங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முனைப்பு காட்டி வருகிறது. அந்தவகையில் வலிமை ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட ஜனவரி 13-ம் தேதியில் அஸ்வினின் "என்ன சொல்ல போகிறாய்" படம் ரிலீஸ் ஆகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?