4 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த ரவுடி பேபி தீ பாடிய 'என்ஜாய் எஞ்சாமி' !

Published : Mar 21, 2021, 04:02 PM IST
4 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த ரவுடி பேபி தீ பாடிய 'என்ஜாய் எஞ்சாமி' !

சுருக்கம்

ரவுடி பேபி புகழ்,  தீ பாடி நடித்துள்ள 'என்ஜாய் எஞ்சாமி' ஆல்பம் பாடலை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மார்ச் 7 ஆம் தேதி அன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த பாடலுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த பாடல் தற்போது 4 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.  

ரவுடி பேபி புகழ்,  தீ பாடி நடித்துள்ள 'என்ஜாய் எஞ்சாமி' ஆல்பம் பாடலை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மார்ச் 7 ஆம் தேதி அன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த பாடலுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த பாடல் தற்போது 4 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

மேலும் செய்திகள்: நடிகர் கார்த்திக்கு இந்த நிலையா? நடக்க கூட முடியாமல் சக்கர நாற்காலில் செல்லும் அதிர்ச்சி புகைப்படங்கள்!
 

'என்ஜாய் எஞ்சாமி' பாடலின் வரிகளை அறிவு எழுதி, தீ யுடன் சேர்ந்து பாடியுள்ளார். மகளின் முதல் இண்டிபெண்டெண்ட் ஆல்பத்திற்கு  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சந்தோஷ் நாராயணனின் வழக்கமான பாடல்களை போல் ‘என்ஜாய் என்ஜாமி’ பாடலும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

இந்த பாடலின் பாடலாசிரியர் மற்றும் ராப் சிங்கருமான அறிவு மற்றும் தீயின் காம்பினேஷன் வேற லெவல். அழிந்து வரும், காடுகள், தாவரங்கள், கிளிகள், பூச்சிகள், பறவைகள் மற்றும் விலங்குகள் நிறைந்த வெப்பமண்டல காடுகளை இந்த வரிகள் உயிர்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. ராப், மற்றும் நாட்டுப்புற இசை என இரண்டையும் கலந்த காம்போவாக இந்த பாடல் வெளியாகியுள்ளது. தி - அறிவு இந்த பாடலை பாடியுள்ளது அல்டிமேட் என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: அச்சு அசல் தாத்தா விஜயகுமார் போலவே இருக்கும் பேரன்..! வைரலாகும் அருண் விஜய் சகோதரியின் மகன் புகைப்படம்..!
 

விதவிதமான தோற்றத்தில் தோன்றி, இந்த பாடலை... உழைக்கும் விவசாய மக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் அர்பணித்துள்ளனர் தீ - அறிவு. இந்த பாடல் வெளியான 2 வாரத்தில், 4 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. மகளின் இந்த பாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து, சந்தோஷ் நாராயணன், ஆதரவு மற்றும் அங்கீகாரம் பெறப்பட வேண்டிய குரல்களையும், கலைஞர்களையும் அடையாளம் காண்பதற்கான முயற்சியை நாங்கள் தொடர்வோம்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்: மாலத்தீவில் கவர்ச்சி அளப்பறையை ஆரம்பித்த ஷிவானி! வைரலாகும் நீச்சல்குள புகைப்படம்!
 

மேலும் துல்கர் சல்மான் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள், 'என்ஜாய் எஞ்சாமி' பாடலை புழிந்து தள்ளி இருந்தனர். ரசிகர்களும் தொடர்ந்து இந்த பாடல் பல்வேறு சாதனைகளை படைக்க தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பித்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Vaa Vaathiyaar படம் எப்படி இருக்கு | Movie Review | Vj Viswa
தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?! | Movie Review | Vj Viswa