மறக்க முடியுமா? சூர்யாவுடன் நடித்த வீடியோவை வெளியிட்டு மலரும் நினைவை பகிர்ந்த லைலா!

Published : Mar 21, 2021, 03:17 PM IST
மறக்க முடியுமா? சூர்யாவுடன் நடித்த வீடியோவை வெளியிட்டு மலரும் நினைவை பகிர்ந்த லைலா!

சுருக்கம்

நடிகை லைகா... சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில், இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான, 'பிதாமகன்' படத்தை பார்த்துள்ளார். எனவே, தன்னுடைய மலரும் நினைவுகளை ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்துகொண்டுள்ளார். 

90 களில் தமிழ் சினிமாவை கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் லைலா.  அஜித் நடித்த 'தீனா', 'விக்ரம் நடித்த 'தில்' சூர்யாவுடன் 'பிதாமகன்' என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் முழுமையாக திரையுலகை விட்டு விலகிய  லைலா நீண்ட இடைவெளிக்கு பின் 'அலிசா' என்ற தமிழ்ப்படத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது. 

இந்த படம் குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்த லைலா, இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதாக இருப்பதால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். இந்த படத்தில் லைலா... பேய் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ரீ-என்ட்ரி கொடுக்கும் முதல் படத்திலேயே இவர் மிரட்டலான வேடத்தில் நடிக்க உள்ளது ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்தது. ஆனால் இந்த படம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் நடிகை லைகா... சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில், இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான, 'பிதாமகன்' படத்தை பார்த்துள்ளார். எனவே, தன்னுடைய மலரும் நினைவுகளை ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்துகொண்டுள்ளார். 

குறிப்பாக பிதாமகன் படத்தில் ரயிலில் இடம்பெற்ற காமெடி காட்சி குறித்து கூறிய லைகா தெரிவித்துள்ளார்.  இந்த காட்சிகளின் படப்பிடிப்பு தேனி அருகே உள்ள 2 ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது என்றும், கிட்டத்தட்ட பத்து நாட்கள் இந்த படப்பிடிப்பில் தான் கலந்துகொண்டதாகவும், இந்த பத்து நாட்களும் எனது மறக்க முடியாத நாட்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

குறிப்பாக தேனி பகுதியை எனக்கு மிகவும் பிடித்த பகுதி என்று லைலா கூறியுள்ளார். மேலும் அந்த ரயில் காட்சியை, வீடியோவாக எடுத்து வெளியிட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்குகள் குவிந்து வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?