
நடிகர் ஆர்யா மிகவும் வித்தியாசமான முறையில் திருமணம் செய்துக்கொள்ள திருமணத்திற்கு பெண் தேடி வருகிறார். ஆரம்பத்தில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்த இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
கடைசியாக மூன்று போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் உள்ளனர். அதில் ஒருவர் ஆர்யாவின் மனதை கொள்ளக் கொண்ட இலங்கை பொண்ணு 'சுசானா'. இவர் திருமணம் திருமணம் ஆகி விவாகரத்தானவர் என்பது தெரிந்தும், ஆர்யா அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்
எப்படியும் அடுத்த வாரம்... ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள உள்ள அந்த பெண் யார் என்பது தெரிந்துவிடும்.
இந்நிலையில், ஆர்யாவின் மனத்தைக் கவர்ந்த சுசானாவின் முதல் கணவர் புகைப்படம் வெளியாகியுள்ளது. சுசானா இலங்கை பெண் என்றாலும் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சுசர்லாந்தில் தான். இவருக்கு 6 வயதில் ஒரு மகனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சி முதலில் 16 பெண்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது கடைசி கட்டத்தில் எட்டியுள்ளதால், ஆர்யா எந்த பெண்ணை திருமணம் செய்வார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.