
பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 திரைப்படத்தின் /பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா மும்பையில் வரும் 20ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
2.0 திரைப்படத்தை பற்றி அவ்வப்போது வெளிவரும் தகவல்கள் சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் முக்கிய செய்தியாக இடம் பெற்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், இந்த படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், உலகமே உற்று நோக்கும் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள 2.0 திரைப்படத்தின் /பர்ஸ்ட் லுக் லான்ச் - மும்பையில் உள்ள யாஷ் ராஜ் ஸ்டூடியோவில் வரும் 20ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என்றும், இந்த நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கண்டு களிப்பதற்காக உலகிலேயே முதன் முறையாக நவீன தொழில்நுட்பங்களை கொண்டு யூ டியூப், லைகா மொபைல் ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை பாலிவுட்டின் முக்கிய இயக்குனரான கரன் ஜோபர் தொகுத்து வழங்குகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.