
தமிழ் திரைப்படங்களுக்கு டிவிட்டரில் எமோஜி உருவாக்கும் ட்ரெண்ட், மெர்சல் படம் மூலம் தொடங்கியது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா திரைப்படத்திற்கும் டிவிட்டரில் எமோஜி வெளியாகி இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் இதற்கான ஹேஷ் டேக் வந்திருக்கிறது. ஹிந்தியில் மட்டும் ’காலாகரிகாலன்’ என்ற பெயரில் ஹேஷ் டேக் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
காலா திரைப்படம் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி இணைந்து நடிக்கும் இரண்டாவது. திரைப்படம். இந்த திரைப்படத்தினை தனுஷ் தயாரித்திருக்கிறார். வரும் ஜீன் 7 அன்று காலா திரைக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதனால் காலா படக்குழு அதற்கான பிரமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. காலா திரைப்படத்தில் அரசியல் பற்றி அதிகம் பேசப்படும் என காலா இசை வெளியீட்டு விழாவின் போது ரஞ்சித் கூறியிருந்தது, காலா மீதான ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது.
என்னதான் காலா எமோஜி டிவிட்டரில் ரிலீஸ் ஆன சந்தோஷம் இருந்தாலும் அது விஜய்-ன் மெர்சல் எமோஜி போல தெளிவாக இல்லை. என கூறி வருத்தப்பட்டிருக்கின்றனர் சில ரஜினி ரசிகர்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.