The Elephant Whisperers: ஆஸ்கர் வென்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானைகள் மாயம்!

By SG Balan  |  First Published Mar 13, 2023, 2:21 PM IST

ஆஸ்கர் விருது வென்ற தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் (The Elephant Whisperers) தமிழ் ஆவணப்படத்தில் இடம்பெற்ற இரண்டு யானைகளும் மதுபோதையில் இருந்தவர்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளன.


95வது ஆஸ்கர் விருதுகளில் தமிழ் ஆவணப்படமான தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் (The Elephant Whisperers) என்ற படம் சிறந்த ஆவணக் குறும்படம் விருதை பெற்றுள்ளது. இந்த விருது கிடைத்த தருணத்தை நாடு முழுவதும் மகிழ்ச்சியடன் கொண்டாடும் சூழலில், அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற ரகு மற்றும் அம்மு ஆகிய இரண்டு யானைகளும்  காணாமல் போயுள்ளன!

இரண்டு யானைகளையும் ஒரு நாளைக்கு முன்பு சிலர் கிருஷ்ணகிரி வனப்பகுதிக்குள் விரட்டியடித்ததாகவும் யானைகளை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் யானைகளின் பராமரிப்பாளர் பொம்மன் கூறுகிறார். இதுபற்றி பொம்மன் கூறுகையில், "நான் இப்போது கிருஷ்ணகிரி வனப்பகுதியில் இருக்கிறேன். குடிபோதையில் இருந்த சிலரால் இரண்டு யானைகளும் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டன. அவற்றைத் தேடுப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்." என்கிறார்.

Tap to resize

Latest Videos

"அவை மற்ற யானைக் கூட்டத்துடன் சேர்ந்துவிட்டனவா அல்லது தனியாகச் சுற்றித் திரிகின்றவா எனத் தெரியவில்லை. அவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் வனத்துறை ரேஞ்சருக்குத் தெரிவித்துவிட்டு ஊருக்குத் திரும்பிவிடுவேன்" என்று பொம்மன் கூறுகிறார்.

பல உணர்ச்சிகளை ஒரு பாட்டுக்குள் பூட்டி வைத்த குறும்படம் போல் உருவான நாட்டு நாட்டு பாடல்! மதன் கார்க்கி பேட்டி!

கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய, தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஒரு பழங்குடி தென்னிந்தியத் தம்பதியான பொம்மன் மற்றும் பெள்ளியின் பயணத்தைச் சித்தரிக்கிறது. அவர்கள் இரண்டு யானைக் குட்டிகளைப் பராமரிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். அவர்களுக்கிடையே உள்ள பிரிக்க முடியாத பிணைப்பையும், காலப்போக்கில் அவர்களின் செயல்கள் இயற்கைக்கு எவ்வாறு பங்களித்தன என்பதையும் ஆவணப்படக் குறும்படம் விவரிக்கிறது.

ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது பற்றி பெருமிதம் தெரிவித்துள்ள பொம்மன் இயக்குநர் கார்த்திகிக்கு நன்றி கூறியுள்ளார். "படம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் எங்களையும் யானைகளையும் எங்கள் வழக்கம் போல் படமாக்கினர். எங்கள் வழக்கமான வாழ்க்கையை நாள்தோறும் படம்பிடித்தனர். இருப்பினும், கேமரா முன் நிற்பது முதல் முறை என்பதால் பேசுவது வித்தியாசமாக இருந்தது. கார்த்திகி மேடம் அவர்களுக்கும், யானைகளுக்கும் எனது நன்றிகள்.இந்த விருது ஒட்டுமொத்த நாட்டுக்கும் வனத்துறைக்கும் பெருமை சேர்த்ததில் மகிழ்ச்சி" என்று பொம்மன் தெரிவிக்கிறார்.

விஸ்காம் படிச்சு என்ன சாதிச்சிடுவனு கேட்பவர்களுக்கு இதுஒரு பதில்! oscar நாயகி கார்த்திகியின் பேராசிரியை பேட்டி

click me!