மாஸ்டருக்கு வழிவிட்ட கார்த்தி... மல்லுக்கு நிற்கும் சிம்புவால் தியேட்டர் உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!

By Kanimozhi PannerselvamFirst Published Dec 22, 2020, 7:57 PM IST
Highlights

சிம்பு நடித்திருக்கும் ஈஸ்வரன் திரைப்படத்தையும் பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர ஈஸ்வரன் படக்குழுவினர் முடிவு செய்து இதற்கான பேச்சுவார்த்தையை திரையரங்கு உரிமையாளர்களுடன் நடத்தியுள்ளனர்

கடந்த ஆண்டு தீபாவளி பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படமும், கார்த்தியின் ‘கைதி’ திரைப்படமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. வசூல் ரீதியாக ‘பிகில்’ திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்தது. அதேபோல் வசூல், விமர்சன ரீதியாக ‘கைதி’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘கைதி’ படத்தின் வெற்றியைப் பார்த்து தான் தளபதி விஜய் தன்னுடைய அடுத்த படத்திற்கு  லோகேஷ் கனகராஜை ஓ.கே.செய்தார். தற்போது விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கார்த்தியின் ‘சுல்தான்’ படமும் அன்றைய தினமே வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் கடந்த ஆண்டு தீபாவளியைப் போலவே விஜய், கார்த்தி படங்கள் மோத உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் மாஸ்டர் படத்திற்கு 1000 தியேட்டர்களை ஒதுக்க தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ள நிலையில், பொங்கல் ரேஸில் இருந்து விலகுவதாக சுல்தான் படக்குழு அறிவித்தது. 

சிம்பு நடித்திருக்கும் ஈஸ்வரன் திரைப்படத்தையும் பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர ஈஸ்வரன் படக்குழுவினர் முடிவு செய்து இதற்கான பேச்சுவார்த்தையை திரையரங்கு உரிமையாளர்களுடன் நடத்தியுள்ளனர். ஆனால் சுமார் 800 திரைகளில் மாஸ்டர் திரைப்படத்தை மட்டும் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் உறுதியாக உள்ளதால் ஈஸ்வரன் திரைப்படம் வெறும் 200திரைகளில் மட்டுமே திரையிடப்படுகிறது. ஒருவேலை ரிலீசுக்குப் பிறகு நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் ஈஸ்வரன் படத்திற்கான தியேட்டர்களை அதிகரிப்பதாக தியேட்டர்கள் உரிமையாளர்கள் தெரிவித்ததால் படக்குழு கடும் அதிர்ச்சியில் உள்ளதாம். 

click me!