அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இசையமைப்பாளர்... “வலிமை” அப்டேட் என்று வெளியாகிறது தெரியுமா?

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Dec 22, 2020, 06:22 PM ISTUpdated : Dec 22, 2020, 06:26 PM IST
அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இசையமைப்பாளர்... “வலிமை” அப்டேட் என்று வெளியாகிறது தெரியுமா?

சுருக்கம்

தற்போதைக்கு வலிமை படம் குறித்து வாய் திறக்க கூடிய ஒரே நபராக அந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மட்டுமே இருக்கிறார். 

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் -  போனிகபூர் - அஜித் கூட்டணி வலிமை திரைப்படம் மூலமாக மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

இதையும் படிங்க: குட்டி பாப்பா டூ க்யூட் ஹீரோயின் வரை... தமன்னாவின் அதிகம் பார்த்திடாத கலக்கல் போட்டோஸ்...!

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் மீண்டும் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக ‘வலிமை’ திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதால் படம் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தல அஜித்தின் வலிமை படம் குறித்து அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். “வலிமை படத்தின் update கேட்டு கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு... படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் திரு அஜித் குமார் அவர்களும், அனுபவமிக்க தயாரிப்பாளருமான திரு போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து "வலிமை" படத்தின் update குறித்து முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளி இடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும், அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும்” என கூறியிருந்தார்.

 

இதையும் படிங்க: இனி முல்லையாக நடிக்கப்போவது இவர் தான்... முதன் முறையாக ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படங்கள்...!

தற்போதைக்கு வலிமை படம் குறித்து வாய் திறக்க கூடிய ஒரே நபராக அந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மட்டுமே இருக்கிறார். சமீபத்தில் கடந்த14ம் தேதி முதல் வலிமை படத்தின் இசை கோர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அப்டேட் கொடுத்தார். தற்போது யுவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வலிமை பட அப்டேட் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், புத்தாண்டு தினத்தில் அப்டேட் கிடைக்கும் என சொல்லி குஷியாக்கியுள்ளார். அந்த ஸ்கீரின் ஷாட்டை தாறுமாறாக ஷேர் செய்து தல ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.a

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உருகி உருகி ரசிக்கும் ரசிகர்கள்.! இந்தியா முழுக்க மாஸ் வேட்டை! வசூலில் பட்டைய கிளப்பிய Border 2.!
Moondru Mudichu: இன்று வெளியான ஹாட் நியூஸ்! ‘மூன்று முடிச்சு’ சீரியலில் தொடங்கும் புதிய அத்தியாயம்!