
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனும், வளர்ந்து வரும் இளம் கதாநாயகருமான துல்கர் சல்மானுக்கு முதல் பெண்குழந்தை சென்னை மருத்துவமனையில் இன்று பிறந்துள்ளது.
துல்கர் சல்மான் நடித்த “தி கம்ரேட் இன் அமெரிக்கா” திரைப்படம் இன்று கேரள திரையங்குகளில் ரீலீஸ் ஆகிய சக்கை போடு போட்டுவரும் வேளையில், அவருக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது.
தனக்கு முதல் குழந்தையாக குட்டி இளவரசி பிறந்துள்ளார் என்பதை சமூக ஊடகங்களில் துல்கர் சல்மான் சிறிது நேரத்துக்கு முன் அறிவித்தார். சென்னையில் உள்ள மதர்வுட் மருத்துவமனையில் துல்கர்சல்மான் மனைவி அமல் சூபியாவுக்கு குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011ம் ஆண்டு,டிசம்பர் 22ந்தேதி துல்கருக்கும், அமல்சூபியாவுக்கு திருமணம் நடந்தது. துல்கர் சல்மான் மலையாள திரையுலகில் நடிக்க வந்து, தனது 2வது படமான செகன்ட் ஷோ படம் ரிலீஸ் ஆனதும் திருமணம் நடந்தது.
தனக்கு குழந்தை பிறந்துள்ளது குறித்து துல்கர் பேஸ்புக்பக்கத்தில் கூறியிருப்பதாவது-
என்னுடைய வாழ்க்கை இனி மாறப்போகிறது. சொர்கத்தில் இருந்து விழுந்த ஒற்றை துளியால், நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறோம். என்னுடைய நீண்ட கால கனவு நிறைவேறி இருக்கிறது. எனக்கு குட்டி இளவரசி பிறந்து இருக்கிறாள். அம்முவுக்கு தன்னுடைய மினிவெர்சனை பார்க்கப்போகிறாள்.
இன்றைய நாளை நான் எப்போதும் மறக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.