படப்பிடிப்பில் தீ விபத்து - ஆர்.கே.சுரேஷுக்கு ஏற்பட்ட சோகம்...

First Published May 5, 2017, 5:15 PM IST
Highlights
r.k suresh met fire accident


இயக்குனர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' படத்தில் வில்லனாக அறிமுகம் கொடுத்த, தயாரிப்பாளர் 'ஆர்.கே.சுரேஷ்' தற்போது ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இவர் ஹீரோவாக நடிக்கும் 'வேட்டைநாய்' படத்தின் படப்பிடிப்பு, மதுரையில் நடைபெற்றது. இதில் அவருடன்  வில்லனாக நடிக்கும் 'விஜய்கார்த்தியுடன்' கையில் தீப்பந்தம் பிடித்து ஒரு வீட்டின் உள்ளே சண்டை போடும் காட்சி படமாக்கப்பட்டது.

எதிர்பாராத விதமாக தீ பந்தம் கிழே விழுந்து படப்பிடிப்பு நடந்த வீட்டில் தீ மள மள வென பரவ தொடங்கியது தொடங்கியது, உடனடியாக படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஆனால் ஆர்.கே.சுரேஷ் வெளியே வருவதற்குள் தீ அதிகமாக பரவியதால் அவருக்கு தீ காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் உடனடியாக அவரை அருகே உள்ள தனியார் மருத்துவ மணியில் படக்குழுவினர் சேர்த்தனர், தற்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளதாகவும். ஒரு வாரத்திற்குப்  மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று தெரிவித்துள்ளனர்.

click me!