என்னது...!! கட்டப்பாவும், சிவகாமியும் ரொமான்ஸா?

 
Published : May 05, 2017, 04:19 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
என்னது...!! கட்டப்பாவும், சிவகாமியும் ரொமான்ஸா?

சுருக்கம்

kattappa and sivagami romance in advertisement

சினிமாக்காரர்களின் மிகப்பெரிய ஹிட் முதலீடு என்ன தெரியுமா? பணமோ, சக்ஸஸ் ஹீரோக்களின் கால்ஷீட்டோ இல்லை. ரசிகர்களின் அடிமுட்டாள்தனமான சினிமா வெறிதான் இவர்களின் முதலீடே. 

வெற்றி பெற்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட பிராப்பர்ட்டீஸ் கூட சில காலம் வரை மார்க்கெட்டில் சக்கைபோடு போடும். நதியா கம்மல், அன்புள்ள ரஜினிகாந்த் சட்டை, குஷ்பூ ஜாக்கெட், ஆட்டோகிராப் சேலை என்று தமிழ் ரசிகனின் பைத்தியக்காரத்தனங்களுக்கு அளவே இல்லை. 

இதை சினிமாக்காரர்கள்தான் தங்களின் முதலீடாக்கி காசு பார்க்கிறார்கள் என்று பார்த்தால் கார்ப்பரேட் உலகின் மற்ற சில தொழில் வடிவங்களும் இந்த வேலையை பார்க்க ஆரம்பித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

பாகுபலி படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரங்கள் ராஜமாதா சிவகாமியும், அடிமை தளபதி கட்டப்பாவும். பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா கேரக்டர், சிவகாமியை ‘தாயே!’ என்றுதான் அழைக்கும். இதுவரையில் தமிழின் இதிகாச வரலாற்றில் ராஜ விசுவாசம் எனும் சொல்லுக்கு இலக்கணமாய் இருந்தது ராம பக்தனான அனுமன் தான். தன் நெஞ்சையே பிளந்து ராமர்_சீதை தம்பதிகளை காண்பித்து விசுவாசத்தை நிரூபித்தவன். 

அந்த அனுமனையே பீட் செய்யுமளவுக்கு ராஜவிசுவாசி யாக கட்டப்பாவுக்கு பில்ட் அப் ஏற்றிவிட்டார்கள். 
இந்நிலையில் ‘கட்டப்பாவும், சிவகாமியும் ரொமான்ஸ்! ஷாக்கிங் வீடியோ’ என்று இணையத்தில் ஒரு செய்தி சுழன்று கொண்டிருக்கிறது.

அடங்கொன்னியா! ஒருவேளை பாகுபலி படத்தின் ‘எடிடட்ட் அல்லது டெலிடட் சீன்ஸாக இருக்குமோ?’  என்கிற அதிர்ச்சியுடன் உள்ளே போய் பார்த்தால்....போத்தீஸ் ஜவுளிக்கடைக்கான விளம்பரத்தில் சத்யராஜூம் (கட்டப்பா), ரம்யாகிருஷ்ணனும் (சிவகாமி) ஊடல், கூடலாய் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

எப்படியெல்லாம் வியூ பண்ண வெச்சு காசு பார்க்கிறானுங்க? என்று ஜிவ்வ்வ்வென்று ஏறுகிறது கடுப்பு. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி... ஜனநாயகனை காலி பண்ண என்னென்ன பண்றாங்க பாருங்க..!
அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்