
பிரபல தமிழ் நடிகை ராதாவின் மகளும், நடிகையுமான கார்த்திகா அறிமுகமான 'கோ' திரைப்படம் நல்ல என்ட்ரியை கொடுத்தது.
பின் அவர் நடித்த அனைத்து படங்களும் பிளாப் ஆனதால், தொடர்ந்து தமிழில் நடிக்க அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
இந்நிலையில் தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்தி தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க உள்ளார்.
அரம்ப், என்று பெயரிடப்பட்டு உருவாகிவரும், இந்த தொடருக்கு 'பாகுபலி' படத்திற்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் தான் கதை எழுதுகிறார்.
'பாகுபலி' போலவே பிரமாண்டமாக தயாராகவுள்ள இந்த தொடரில் தேவசேனா என்ற இளவரசி கேரக்டரில் கார்த்திகா நடிக்கவுள்ளார். ஆனாலும் 'பாகுபலி' தேவசேனாவுக்கும் இந்த தேவசேனாவுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த தொடரில் நடிப்பது குறித்து கார்த்திகா கூறியபோது, 'என்னுடைய இளவரசி கேரக்டருக்காக பல சண்டைப்பயிற்சிகளை செய்து வருகிறேன். குறிப்பாக யானை, குதிரை மீது இருந்து கொண்டே வாள்சண்டை புரிவது, தண்ணீருக்குள் சண்டை புரிவது போன்ற பயிற்சிகளை செய்து வருகிறேன்' என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த தொடரில் கார்த்திகா தவிர மற்ற அனைவரும் பாலிவுட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோல்டி பெல் என்பவர் இயக்கும் இந்த தொடரில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.