டங்கல், பாகுபலியை தொடர்ந்து சீனாவுக்கு போகுது திரிஷியம்…

First Published Jun 19, 2017, 9:52 AM IST
Highlights
drishyam going to release in china after Tangal and bahubali


திரிஷியம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு சீனாவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியாகி வசூலை வென்றது போல சீனாவிலும் வசூலை அடையும் என்பதில் ஐயமில்லை.

இயக்குனர் ஜீத்துஜோசப் இயக்கத்தில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான படம் தான் ‘த்ரிஷ்யம்‘.

இந்தப் படத்தில் மோகன்லால், மீனா, போன்றோர் நடித்துள்ளனர்.

திரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்தப் படத்தின் கதை எந்த மொழிக்கும் பொருந்தக் கூடிய எந்த மொழி மக்களும் தங்கள் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி பார்த்துக் கொள்ளும் வகையிலான படம்.. அதனால்தான் இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் ரீமேக் ஆனது.

இந்த நிலையில் இந்தப் படத்தை சீனாவில் ரிலீஸ் செய்யும் வேலைகள் நடைபெற்று.

சமீபகாலமாக இந்திய படங்களுக்கு சீனாவில் கிடைக்கும் வரவேற்பு அதிகமாகி வருகிறது. அமீர்கானின் ‘தங்கல்’ சீனாவில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

அடுத்ததாக ‘பாகுபலி-2’ சீனாவில் பிரமாண்டமாக ரிலீஸாக இருக்கிறது.

அதனால் த்ரிஷ்யம் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

tags
click me!