
நடிகர் சங்கம் கட்டிடம் கட்டும் இடத்தில் அஞ்சல் நிலையம் இருந்ததா என ஆய்வு செய்து சென்னை மாநகராட்சி அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தியாகராய நகர், அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல சாலையை ஆக்கிரமித்து, நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டுவதாக கூறி, தியாகராயநகர் வித்யோதயா காலனியைச் சேர்ந்த கே.எம்.ஸ்ரீரங்கன், ஆர்.அண்ணாமலை ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்குரைஞர் ஆணையராக கே.இளங்கோவனை நியமித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த ஆய்வுக்குப் பின் அவர் தாக்கல் செய்த அறிக்கையில், ‘சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில், அந்த இடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சல் நிலையம் இருந்தாக தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், “அந்த இடத்தில் அஞ்சல் நிலையம், பொதுசாலை இருந்ததா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டு, வழக்கில் தலைமை அஞ்சல் துறை தலைவரை எதிர் மனுதாரராக இணைத்து” விசாரணையை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு விசாரணையை பார்வையிட நடிகர்கள் நாசர், கார்த்திக், பசுபதி, பொன்வண்ணன், நடிகை சங்கீதா ஆகியோர் நேரில் வந்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.