கொரோனாவிடம் இருந்து தப்பிய “திரெளபதி”... மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published Mar 19, 2020, 12:31 PM IST
Highlights

தியேட்டர்களில் “திரெளபதி” திரைப்படம் 18 நாட்கள் ஓடியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அந்த படம் 14.28 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. 

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா பீதியால் தமிழகம் முழுவதும் தியேட்டர்கள், மால்கள் உள்ளிட்டவற்றை மார்ச் 31ம் தேதி மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் சினிமா, சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி வெளியான “திரெளபதி” திரைப்படம் வசூலில் செய்துள்ள சாதனையை ஒட்டுமொத்த கோலிவுட்டையே வாய்பிளக்க வைத்துள்ளது. 

நாடக காதலை தோலுரிப்பதாக கூறிய கடந்த மாதம் 28ம் தேதி வெளியான திரைப்படம் “திரெளபதி”. பழைய வண்ணாரப்பேட்டை இயக்குநர் மோகன் ஜி இயக்கியுள்ள இந்த படத்தில் ஷாலினி அஜித்தின் தம்பி ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார், கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியான போதில் இருந்தே எதிர்ப்பும், ஆதரவும் பெருகி வந்தது. 

இதையும் படிங்க: அட்லிக்கு ஆப்பு வைத்த லோகேஷ் கனகராஜ்... தளபதியை “மாஸ்டர்” பிளான் போட்டு தூக்கிட்டார் போல...!

தமிழகத்தில் 330 தியேட்டர்களில் வெளியான படம் வசூலில் வேற லெவலில் மாஸ் காட்டி வருகிறது. நாடக காதல் குறித்து வெளிப்படையாக கருத்து கூறியதால் படம் சில சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரத்திலேயே 10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இந்த வெற்றியை கொடுத்த உஙகள் அனைவருக்கும், ஈசனுக்கும் நன்றி 🙏❤️😍 https://t.co/RO665HNUIn

— Mohan G 🔥😎 (@mohandreamer)

இதையும் படிங்க: தமிழ் சினிமாவை தட்டித்தூக்கும் சன்பிக்சர்ஸ்... 1000 கோடி பட்ஜெட்டில் போட்ட மெகா பிளான்...!

தியேட்டர்களில் “திரெளபதி” திரைப்படம் 18 நாட்கள் ஓடியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அந்த படம் 14.28 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் மோகன் ஜி, இந்த வெற்றியை கொடுத்த உங்கள் அனைவருக்கும், ஈசனுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். தமிழில் முதன் முறையாக கிரவுட் ஃபண்டிங் முறையில் 50 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட “திரெளபதி” திரைப்படத்தை, வாங்கிய விநியோகஸ்தர்கள்  அனைவருக்கும் 3 மடங்கு லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 
 

click me!