விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம ட்ரீட்...

 
Published : May 14, 2017, 01:20 PM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம ட்ரீட்...

சுருக்கம்

Double Treat For Vijay Fans On His Birthday

விஜய் பிறந்தநாளான வருகிற ஜுன் 22-ஆம் தேதி விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அதேநாளில் விஜய்யின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவலும் வெளியாகிறது. 

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது மூன்று வேடத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். சென்னை, மதுரையில் படமாக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் முக்கிய படப்பிடிப்பு தற்போது ஐரோப்பாவில் நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். 

மேலும், சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா மற்றும் 'ஆண்டவன் கட்டளை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஹரீஷ் பேரடி வில்லனாக நடிக்கிறார்கள்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜுன் 22-ஆம் தேதி வெளியிடப்படுகிறது மேலும்  அதேநாளில் விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மற்றொரு அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதாவது, விஜய்யின் 62-வது படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விஜய் பிறந்தநாளில் வெளியானால் விஜய் ரசிகர்களுக்கு அது செம ட்ரீட் தான். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!