ட்விட்டர், ஃபேஸ்புக்கில் வெளியான நடிகை ஸ்ருதியின் ஆபாச படங்கள்... நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்...

 
Published : May 14, 2017, 12:15 PM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
ட்விட்டர், ஃபேஸ்புக்கில் வெளியான நடிகை ஸ்ருதியின் ஆபாச படங்கள்... நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்...

சுருக்கம்

Shruthi files complaint over morphed pics viral on social media

நடிகை ஸ்ருதியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதுதொடர்பாக நடிகை ஸ்ருதி போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட்டை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளார்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகை ஸ்ருதி ஹரிகரண் தாரக், யுர்வி, ஹேப்பி நியூ இயர், விஸ்மயா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தமிழில் ‘நெருங்கி வா முத்தமிடாதே‘ என்ற படத்திலும், மலையாள படங்களிலும் ஸ்ருதி நடித்திருக்கிறார். 

இந்த நிலையில், ஸ்ருதியின் புகைப் படங்களை ஆபாசமாக சித்தரித்து சில மர்மநபர்கள் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டு இருந்தார்கள். இதுபற்றி அறிந்த ஸ்ருதி அதிர்ச்சியும் அடைந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் பெங்களூரு கமிஷனர் அலுவலகத்திற்கு நடிகை ஸ்ருதி வந்தார். 

பின்னர் அவர், போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட்டை சந்தித்து தனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் மர்மநபர்கள் வெளியிட்டு இருப்பதாகவும், அவர்களை கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்தார். 

இந்த நிலையில், போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் நடிகை ஸ்ருதியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த மர்மநபர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!