சரத்பாபு நலமுடன் உள்ளார்..! வதந்திகளை நம்ப வேண்டாம் சகோதரி உருக்கமான வேண்டுகோள்..!

Published : May 03, 2023, 10:02 PM IST
சரத்பாபு நலமுடன் உள்ளார்..! வதந்திகளை நம்ப வேண்டாம் சகோதரி உருக்கமான வேண்டுகோள்..!

சுருக்கம்

நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில், உடல் நல குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வதந்தி பரவியதை தொடர்ந்து, சரத்பாபுவின் சகோதரி ட்வீட் போட்டு உண்மையை தெரிவித்துளளார்.  

தமிழ் சினிமாவில், இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'பட்டினப்பிரவேசம்' திரைப்படத்தின் மூலம், அறிமுகமானவர் சரத்பாபு. இவரின் அழகும், நேர்த்தியான நடிப்பும், இவருக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று தந்தது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து இவர் நடித்த 'முத்து', 'அண்ணாமலை', போன்ற திரைப்படங்கள் இவருடைய சினிமா கேரியரில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளிலும் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்த சரத்பாபு, கடந்த சில மாதங்களாகவே செப்சிஸ் என்கிற அரிய வகை பாதிப்பு காரணமாக, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் இவருடைய உடல்நலம் குறித்த தகவல் வெளியான போது, அவருடைய உடல் உறுப்புகள் செயலிழக்க தொடங்கி விட்டதாகவும், எனவே ஐசுயுவில் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் சற்று முன்னர், சிகிச்சை பலனின்றி நடிகர் சரத்பாபு உயிரிழந்ததாக வதந்தி பரவியது. இதை தொடர்ந்து குஷ்பூ, கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் அவர் இறந்து விட்டதாக அவருக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சமூக வலைத்தளங்களில் அந்த தகவல் நிஜம் என... செய்திகளும் வெளியாகின. இந்நிலையில் சரத் பாபுவின் சகோதரி உண்மை என்ன என்பதை தெரிவித்துள்ளார்.

சரத்பாபுவின் உடல்நிலை குறித்து அவரது சகோதரி ( தெலுங்கில்)வெளியிட்டுள்ள ட்விட்டில்,  சமூக வலைதளங்களில் சரத்பாபு பற்றிய அனைத்து செய்திகளும் தவறானவை . சரத்பாபு சற்று குணமடைந்து வருகிறார். அவரது அறை மாற்றப்பட்டுள்ளது. சரத்பாபு விரைவில் பூரண குணமடைந்து மீடியாக்களிடம் பேசுவார் என்று நம்புகிறேன்.... சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்பது எனது வேண்டுகோள் என கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?