இந்நிலையில் நடிகர் சித்ரா லட்சுமணன் தன்னுடைய யூ-டியூப் சேனலில் கீர்த்தி சுரேஷ் குறித்து அடுத்த அதிரடியை கொளுத்தி போட்டுள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால் உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் “அண்ணாத்த” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்தின் தங்கையாக நடிப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாஜகவைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகனை கீர்த்தி மணக்க உள்ளதாகவும், இந்த திருமணம் முழுக்க முழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க:மொத்தமாய் அள்ளி கொடுத்த ஐ.பி.எஸ். அதிகாரி.... குவியும் பாராட்டுக்கள்...!
இதனால் கடுப்பான கீர்த்தி சுரேஷ், தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்றும், தற்போது திருமணம் பற்றி எந்த எண்ணமும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார். மேலும் தனது சொந்த வாழ்க்கை குறித்து இப்படி அபத்தமான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் காட்டமாக பதில் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் சித்ரா லட்சுமணன் தன்னுடைய யூ-டியூப் சேனலில் கீர்த்தி சுரேஷ் குறித்து அடுத்த அதிரடியை கொளுத்தி போட்டுள்ளார். அதாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒருவர், தனது நண்பர் மூலம் கீர்த்தி சுரேஷை காதலிப்பதாக தூது அனுப்பியுள்ளார். ஆனால் அதை மறுத்த கீர்த்தி, தான் 5 ஆண்டுகளாக வேறு ஒரு இளம் நடிகரை காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்ய தீர்மானித்துள்ளதாகவும் பளீச்சென பதில் கூறிவிட்டாராம்.
இதையும் படிங்க: “வாத்திங் கம்மிங்” பாட்டுக்கு மரண மாஸ் டான்ஸ்... வேற லெவலில் வைரலாகும் மைனா நந்தினி வெர்ஷன்...!
என்ன தான் கீர்த்தி சுரேஷ் தரப்பில் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் நடக்கும் என்று கூறினாலும், கண்டிப்பாக அது காதல் திருமணமாகத் தான் இருக்கும் என்று அடித்து கூறுகிறார் சித்ரா லட்சுமணன். இதுக்கு கீர்த்தி என்ன பதில் சொல்ல போறாங்கன்னு பொறுத்திருந்து பார்ப்போம்....!