
கார்ஸ் - 3 அனிமேஷன் படம் தமிழில் ‘தட்றோம் தூக்றோம் தெறிக்கவிடுறோம்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் 3டி அனிமேஷன் படங்களில் ஒன்று கார்ஸ். இதன் முதல் 2 பாகங்களும் செம்ம ஹிட்டானது.
இப்போது இதன் 3-ஆம் பாகம் வெளிவர இருக்கிறது.
இந்த படத்தை பிக்சட் அனிமேஷன் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதில் ஹீரோ, ஹீரோயின், வில்லன் எல்லாமே கார்கள்தான்,
கார் ரேஸ் கதை களம். கார்கள் பேசும், காதலிக்கும், சண்டைபோடும். வால்ட்டிஸ்னி தயாரித்துள இந்தப் படத்தை முதல் இரண்டு பாகத்தை இயக்கிய பிரைன் பீ இயக்கி உள்ளார்.
ரண்டி ரீவ்மேன் இசை அமைத்துள்ளார்,
ஜெர்மி லக்ஸி, நியூட்டன் தாமஸ் சிகல் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் வருகிற 16-ஆம் தேதி வெளியாகிறது.
இதனை தமிழில் ‘தட்றோம் தூக்றோம் தெறிக்கவிடுறோம்’ என்ற டைட்டில் வைத்து வெளியிடுகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.