ஹீரோவாக அறிமுகமாகும் விஜய் மகன்... முதல் படத்திலேயே இவ்வளவு சம்பளமா?

By Kanimozhi PannerselvamFirst Published Jun 10, 2020, 6:25 PM IST
Highlights

அதற்கு பதிலாக விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் முக்கிய இடம் பிடித்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2009ம் ஆண்டு விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற ஓபனிங் பாடலான நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலுக்கு தந்தை விஜய்யுடன் சேர்ந்து நடனமாடினார் ஜேசன் சஞ்சய். அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில், தனது பள்ளிப்படிப்பை முடித்த சஞ்சய் தனது அப்பாவைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக வெளிநாட்டில் படித்து வருகிறார். அதனை முடிந்ததும் அப்பா விஜய்யைப் போலவே, இந்தியா வந்ததும் ஜோசன் சஞ்சய் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதையும் படிங்க: 

தெலுங்கில் புச்சி பாபு சனா இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும், ரங்கஸ்தலம் பட இயக்குநர் சுகுமாரும் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்தில், நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகனான வைஷ்ணவ் தேஜ் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ராயாணம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இதையும் படிங்க: 

இந்த படத்தின் கதையை 'மாஸ்டர்' படப்பிடிப்பின் போது விஜய்யிடம் கூற, இந்த கதை தன்னுடைய மகனுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என விஜய் கூறியதாகவும், இதை கேட்ட விஜய் சேதுபதி உங்கள் மகன் இந்த படத்தில் நடிக்கிறார் என்றால்  நானே தயாரிக்கிறேன் என கூறியதாகவும் ஒரு தகவல்கள் வெளியாகின. இதையடுத்து உப்பெனா படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானதை கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

இதையும் படிங்க: 

தற்போது ஜேசன் சஞ்சய் அந்த படத்தில் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் முக்கிய இடம் பிடித்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா  படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய கோகுல் எழுதி இயக்குகிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக சஞ்சய்க்கு 7 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தளபதி விஜய்யோ, வெளியாகி வெற்றி பெற்ற பிறகு சம்பளத்தை பற்றியெல்லாம் பேசிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம். 
 

click me!