‘அவன்’, ‘இவன்’ என ஏக வசனத்தில் கிழித்தெடுத்த குஷ்பு... சர்ச்சை ஆடியோவால் சிக்கலில் சிக்கி தவிப்பு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 10, 2020, 05:14 PM ISTUpdated : Jun 10, 2020, 05:27 PM IST
‘அவன்’, ‘இவன்’ என ஏக வசனத்தில் கிழித்தெடுத்த குஷ்பு... சர்ச்சை ஆடியோவால் சிக்கலில் சிக்கி தவிப்பு...!

சுருக்கம்

அதில் சின்னத்திரை சங்கத்தின் செயலாளரான குஷ்பு பத்திரிகையாளர்களை ஒருமையில் விமர்சிக்கும் உரையாடல்கள் இடம் பெற்றிருந்தன. 

கடந்த சில நாட்களாக நடிகை குஷ்பு பேசியதாக ஆடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் சின்னத்திரை சங்கத்தின் செயலாளரான குஷ்பு பத்திரிகையாளர்களை ஒருமையில் விமர்சிக்கும் உரையாடல்கள் இடம் பெற்றிருந்தன. ப்ரஸ்காரர்கள் எங்கிருந்தாவது வந்துவிடுவார்கள். போட்டோ, வீடியோ எடுத்துக் கிழிப்பதற்கு. கோவிட் தவிர்த்து ப்ரஸ்காரனுக்கு வேறு எந்த செய்தியுமே கிடையாது. நம்மைப் பற்றி எதையாவது போடுவதற்கு காத்திக்கிடப்பார்கள். ஆகையால் ப்ளீஸ் பத்திரம் என்று பேசியுள்ளார். இந்த ஆடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

இதையும் படிங்க: “இந்த இரண்டை மட்டும் செய்தால் போதும்”... குஷ்புவின் ஸ்லிம் லுக் ரகசியம்...!

இந்நிலையில் நடிகை குஷ்பு அந்த ஆடியோ குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். நான் ஊடகங்களை பற்றி பேசியதாக ஒரு ஆடியோ சுற்றி வருகிறது. அது எடிட் செய்யப்பட்டது. அது தயாரிப்பாளர்களின் வாட்ஸ் ஆப் குருப்பில் இருந்து பகிரப்பட்டுள்ளது. எப்படி இவ்வளவு கீழ்த்தரமான புத்தி உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைத்து அவமானமாக இருக்கிறது.

இதையும் படிங்க: கேரளா ஸ்டைல் வேட்டி, சட்டையில் அமலா பால்... கெத்து போஸைப் பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

எனது 34 வருட சினிமா வாழ்க்கையில் என்றுமே ஊடகங்களை பற்றி தரக்குறைவாக பேசியது கிடையாது. நான் பேசியதில் பாதி மட்டுமே வெளியாகியுள்ளது. அந்த வாய்ஸ் மெசெஜ் உங்களில் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அந்த ஆடியோவை பரப்பியது யார் என்று  எனக்கு தெரியும். ஆனால் அந்த தயாரிப்பாளரின் பெயரை நான் வெளியே சொல்லப்போவதில்லை. எனது மன்னிப்பும், அமைதியுமே அவருக்கான மிகப்பெரிய தண்டனை. செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அதைத் தொடர்வேன் என்று கூலாக பதிவிட்டுள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!