காஜல் அகர்வால் கணவர் இப்படி தான் இருக்க வேண்டுமாம்... யார் எல்லாம் ரெடி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 15, 2020, 07:50 PM IST
காஜல் அகர்வால் கணவர் இப்படி தான் இருக்க வேண்டுமாம்... யார்   எல்லாம் ரெடி...!

சுருக்கம்

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ள காஜல் அகர்வால் தனக்கு எப்படிப்பட்ட கணவர் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தது திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விபத்தில் இருந்து காஜல் அகர்வால் நூலிழையில் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் “ஆச்சார்யா” படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அந்த படத்தில் சொன்ன படி தனக்கு சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக்கூறி த்ரிஷா அந்த படத்தில் இருந்து விலகினார். ஆச்சார்யா படத்திற்கான ஹீரோயினை படக்குழு தேடி வந்தது. இந்நிலையில் அந்த படத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமானார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ள நிலையில், அம்மணிக்கு இந்த படத்தில் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதால் முன்னணி ஹீரோயின்கள் வயிற்றெரிச்சலில் உள்ளனர். 


இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ள காஜல் அகர்வால் தனக்கு எப்படிப்பட்ட கணவர் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். எனக்கு காதலிக்க ராஜகுமாரன் தேவையில்லை, எனது எண்ணங்களையும், லட்சியங்களையும் புரிந்து கொண்டு என்னை எனக்காக காதலிப்பவராக இருக்க வேண்டும் என்று பதிலளித்துள்ளார். காஜல் அகர்வாலின் கன்டிஷனுக்கு ஓகே என்றால் நாமும் விண்ணப்பிக்கலாமே என்று இளசுகள் அலைமோதி வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கட்டுக்கடங்காத கூட்டம்... சில்மிஷம் செய்த ரசிகர்கள் - கடவுளே என கதறிய நிதி அகர்வால் - வீடியோ இதோ
மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்