
பிரபலமாக மக்களால் பார்க்கப்படும் அனைவருமே வெள்ளித்திரையில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தால் அதனை பயன்படுத்தி கொள்கிறார்கள். அந்த வகையில், விளம்பர படங்கள் மூலம் தோன்றி அசத்தி வந்த, சரவணா ஸ்டார் அண்ணாச்சி அருள் வெள்ளித்திரையில் கால் பதித்துவிட்டார்.
இவர் விளம்பரப்படங்களில், தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னா ஆகியோருடன் தோன்றியது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. எனினும் தொடர்ந்து தன்னுடைய கடையில் விளம்பர படங்களில் தோன்றி அனைவரையுமே ரசிக்க வைத்தார். நாளுக்கு நாள், விளம்பர படங்களில் இவரின் அழகும், ஸ்டைலும் சற்று அதிகரித்து கொண்டே தான் சென்றது.
மேலும், இவரை திரைப்படங்களில் நடிக்க வைக்க சிலர் முயற்சித்து வருவகாகவும், இவர் நடித்தால் நயன்தாராவுடன் தான் நடிப்பேன் என கூறியதாக கூட தகவல்கள் பரவியது என்பது நாம் அறிந்தது தான்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ரூ.30 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை இவரே ஒரு படத்தை நடித்து தயாரித்தும் வருகிறார். இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய ஜுடி-ஜெர்ரி இயக்கி வருகிறார்கள். சமீபத்தில் கூட இந்த படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு பாடலுக்கு பிரமாண்ட செட் அமைத்து, ரூபாய் 1 கோடி செலவில் படமாக்கினர்.
அரண்மை போன்ற செட்டில், படத்தின் நாயகி ரித்திகா திவாரியுடன் சரவணா ஸ்டார் அண்ணாச்சி அருள் தோன்றிய புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இந்த படம் குறித்து அப்டேட் பற்றி, வெளியாகியுள்ள தகவலில், படம் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் இருப்பதாகவும், தற்போது நிலவி வரும் கொரோனா பிரச்சனை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டுள்ளதாம். கூடிய விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளார்களாம். அதுவரை கார்த்திருப்போம்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.