விஜய்க்கு வில்லனாக நடிக்கும் தமிழக அரசியல்வாதி! திமுகவை சேர்ந்தவரா?

 
Published : Mar 05, 2018, 01:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
விஜய்க்கு வில்லனாக நடிக்கும் தமிழக அரசியல்வாதி! திமுகவை சேர்ந்தவரா?

சுருக்கம்

dmk party ex mla will be villain for vijay

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடிக்கும் விஜய் 62’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சன் நெட்வொர்க் அலுவலகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய் கருப்பு நிற கோர்ட் ஷூட் போட்டு கண்ணாடி அணிந்து மிகவும் ஸ்டைலாக டான் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது.

இந்த படத்தில் விஜய் மல்டி மில்லியனராக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். காமெடிக்காக யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தில் ஏற்கனவே ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்கள் இனைந்து நடித்து வரும் நிலையில், இவர்கள் கூட்டணியில் பிரபல அரசியல்வாதி பழ கருப்பையாவும் இணைந்திருக்கிறார். இவர் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார். மேலும் மற்றொரு வில்லனாக ராதாரவியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மூன்று வில்லன் யார் என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். இதையடுத்து, நேற்று சென்னை தியாகராய நகர், வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் படப்பிடிப்பு நடந்து வந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பில் இவர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி