ஆஸ்கரில் அசத்தும் கிறிஸ்டோபர் நோலனின் டன்கர்க்…. இது வரை 3 விருதுகளை அள்ளியது…

 
Published : Mar 05, 2018, 08:57 AM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
ஆஸ்கரில் அசத்தும் கிறிஸ்டோபர் நோலனின் டன்கர்க்…. இது வரை 3 விருதுகளை அள்ளியது…

சுருக்கம்

Oscar awards christopher Nolan dongurk

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் 90 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில்  இரண்டாம் உலகப் போர் குறித்த கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டன்கர்க் 8 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு தற்போது வரை 3 விருதுகளை அள்ளியுள்ளது.

சினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில்  நடைபெற்று வருகிறது. . 90-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் 2-வது முறையாக தொகுத்து வழங்கினார். ஹாலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு விருதுகளுக்கான போட்டியில், திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங் மிசவுரி என்ற படம் 7 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டோபர் நோலனின் டன்கர்க் திரைப்படம் 8 பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தி ஷேப் ஆப் வாட்டர் திரைப்படம் 13 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் கிறிஸ்டோபர் நோலனின் இரண்டாம் உலகப்போர் பற்றிய டன்கிர்க் படம் சிறந்த படத்தொகுப்பு, ஒலிக்கலவை மற்றும் சவுண்ட் எடிட்டிங்கிற்காக 3 விருதுகளை வென்றுள்ளது.



சிறந்த படம்: த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசெளரி

சிறந்த துணை நடிகர் -சாம் ராக்வெல், படம்: த்ரி பில்போர்ட்ஸ் சைட் எப்பிங் மிசவுரி 49 வயதான சாம் ராக்வெல் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை முதல் முறையாக பெறுகிறார். 


சிறந்த சிகை அலங்காரம் :கஸூஹிரோ சுஜி

சிறந்த ஆடை அமைப்பாளர் : மார்க் பிரிட்ஜஸ், பான்டம் த்ரட்

சிகை அலங்காரம் :கஸூஹிரோ சுஜி,லூஸி சிப்பிக், டேவிட் மலினவ்ஸ்கி ஆகிய 3 பேருக்கு கிடைத்தது



சிறந்த முழு நீள ஆவண படம்: இகாரஸ்

சிறந்த ஒலி தொகுப்பு : டன்கிர்க்

சிறந்த ஒலி தொகுப்பாளர்கள்: அலெக்ஸ் கிப்ஸன் , ரிச்சர்டு கிங்

சிறந்த கலை இயக்குனர் விருது 3 பேருக்கு: பால் ஆஸ்ட்டர் பெர்ரி, ஜெப்ரி மெல்வின், ஷேன் வியூ: படம்தி ஷேப் ஆப் வாட்டர்



சிறந்த துணை நடிகை : ஆலிசன் ஜேனி: படம்: டான்யா

இதில், சிறந்த வெளிநாட்டு மொழிப்படத்திற்கான விருது ஏ  ஃபெண்டாஸ்டிக் உமன் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிலி நாட்டுப்படமான ஏ ஃபெண்டாஸ்டிக் உமன் ஸ்பானிஷ் மொழியில் வெளியானது. படத்தின் இயக்குநர் செபாஸ்டியன் லிலீயோ ஆஸ்கர் விருதைப்பெற்றுக்கொண்டார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி