தியா பட குட்டி பாப்பாவை பற்றி தெரியுமா...? கேட்ட அசந்துடுவீங்க...!

First Published Apr 27, 2018, 2:57 PM IST
Highlights
diya move baby artist verunika details


தியா படத்தின் மூலம் முதல் முறையாக சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளவர், பேபி வெரோனிகா அரோரா, தமிழ் மொழியே தெரியாமல் தமிழில் ஒரு படத்தை நடித்து முடித்து அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.

இந்த குட்டி பாப்பா பிறந்து வளர்ந்தது எல்லாம் டெல்லியில் தானாம், தற்போது 5 வயதாகும் இவர், ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு பாலிவுட் திரையுலகில் மிகவும் பிடித்த நடிகர்கள் என்றால் ஷாருக்கான், மற்றும் வருண் தவான் ஆகியோராம்.

அதே போல் நடிகைகளில் மிகவும் பிடித்தவர்கள்... கத்திரினா கைப், ஆலியா பாட், என்றால் மிகவும் பிடிக்குமாம். 

தமிழில் இவருடன் நடித்த ஒரே நடிகை சாய் பல்லவி என்பதால் அவரையும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் இவருக்கு நடனம், புத்தகம் படிப்பது உள்ளிட்டவை மிகவும் பிடிக்குமாம். இவை அனைத்தையும் கூறும் வெரோனிகா கண்டிப்பாக படத்தை பற்றி மட்டும் எதுவும் கூற முடியாது திரையரங்கம் சென்று படத்தை பாருங்கள் என்பது போல் கூறிவிட்டார்.

மேலும் இந்த சின்ன வயதில் நடிப்பை மிகவும் நன்றாக புரிந்து இந்த குழந்தை செய்யும் ஒவ்வொரு அசைவுகளை நீங்கள் பார்த்தல் அப்படியே அசந்து போயிடுவீங்க. 

click me!