சாய்பல்லவி தன் சாதியை விட்டு தள்ளி வைக்கப்படுகிறார்?: நடிகைக்கு எதிராக ‘தீண்டாமை’ தீ!

By Vishnu PriyaFirst Published Feb 22, 2020, 5:59 PM IST
Highlights

சாய் பல்லவி சினிமாவில் நடிப்பது, கட்டுப்பாடான அவரது சமுதாய பெரியவர்களுக்கு பிடிக்கவில்லை. ’என்ன இது அரைகுறையா ஆடை போட்டபடி சினிமாவுல?!’ என்பார்களாம். அதற்கு சாய் பல்லவியின் குடும்பத்தினரோ ‘அவ என்னைக்குமே கவர்ச்சியாகவோ, ஆபாசமாகவோ உடையணிஞ்சு நடிச்சதில்லை. கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் அதுக்கு என்னைக்கும் சம்மதிக்கமாட்டா. கத்தியில நடக்கிற மாதிரியான சினிமா வாழ்க்கையில அவர் ரொம்பவே ஒழுக்கமான பொண்ணா இருக்குறா.’ என்று பெரியவர்களை சமாதானம் செய்வார்கள். 

நடிகைகள் சிலர் பத்து படங்களில் நடித்தாலும் கூட சொல்லிக் கொள்வது போல் ஒரு கேரக்டரோ, பாடலோ கிடைக்காது. ஆனால் சில நடிகைகள் ரெண்டே படங்களில்  தேசிய புகழ் அடைவார்கள். ஆனால் நடிகை சாய் பல்லவியோ இவை அத்தனையையும் தூக்கி சாப்பிட்டவர். தாறுமாறான நடன திறமை, பாந்தமான அழகு, நீட் நடிப்புத்திறமை இவை அனைத்தும் கலந்த ஒரு கலவைதான் சாய் பல்லவி.  சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் கன்னாபின்னா ஹிட்டடித்த ‘பிரேமம்’ படத்தின் ‘மலர் டீச்சர்’ பாத்திரத்துக்கு மலையளவு நியாயம் செய்தவர் சாய் பல்லவி. அந்தப் படம் அவரை தென்னிந்தியா முழுக்க அடையாளப்படுத்தியது. அதன் பின் தனுஷுடன் அவர் நடித்த ‘மாரி 2’ படத்தில், ‘ரெளடி பேபி’ பாடலில் அவர் ஆடிய நடனமோ இன்று உலக அளவில் டிரெண்டிங் பாடல்களில் ஒன்றாக உள்ளது. இப்படி ஒரு படம், ஒரு பாடல் என சிம்பிள் ரூட்டில் செம்ம உச்சம் தொட்டவர் சாய்பல்லவி. இப்பேர்ப்பட்ட பொண்ணுக்கு எதிராகத்தான் அவரது சொந்த சாதியே வரிந்து  கட்டிக் கொண்டு இறங்கியுள்ளது என உறுதியான தகவல்கள் பதற வைக்கின்றன. 


அதாவது ஊட்டி அடங்கிய நீலகிரி மாவட்டம்தான் சாய் பல்லவியின் சொந்த ஊர். இந்த மண்ணின் ஒரு சமுதாயத்தில் பிறந்தவர்தான் சாய் பல்லவி. கட்டுப்பாடு, உபசரிப்பு, ஒழுக்கம், பாரம்பரியம், கடவுள் பக்தி, உழைப்பு, தன்மானம் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றது அந்த சமுதாயம். எங்கே போனாலும் தங்கள் சாதி மக்களை அரவணைப்பதும், கொண்டாடுவதும், ஆறுதல் படுத்துவதுவம் அம்மக்களின் வழக்கம். இந்த நிலையில்தான் சாய் பல்லவிக்கு எதிராக அவர்கள் கொந்தளித்துள்ளனர், இதெல்லாம் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும், பிரபல வாரம் இருமுறை அரசியல் புலனாய்வு புத்தகத்திலும் கூட வெளிப்பட்டுவிட்டது! சாய் பல்லவிக்கு எதிராக ஒருவித தீண்டாமை நடக்கிறது! என்று பட்டாசு கொளுத்துகின்றனர்.  இது பற்றி சற்று விரிவாக பேசும் விமர்சகர்கள்...”சாய் பல்லவி சினிமாவில் நடிப்பது, கட்டுப்பாடான அவரது சமுதாய பெரியவர்களுக்கு பிடிக்கவில்லை. ’என்ன இது அரைகுறையா ஆடை போட்டபடி சினிமாவுல?!’ என்பார்களாம். அதற்கு சாய் பல்லவியின் குடும்பத்தினரோ ‘அவ என்னைக்குமே கவர்ச்சியாகவோ, ஆபாசமாகவோ உடையணிஞ்சு நடிச்சதில்லை. கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் அதுக்கு என்னைக்கும் சம்மதிக்கமாட்டா. கத்தியில நடக்கிற மாதிரியான சினிமா வாழ்க்கையில அவர் ரொம்பவே ஒழுக்கமான பொண்ணா இருக்குறா.’ என்று பெரியவர்களை சமாதானம் செய்வார்கள். 


இந்த நிலையில் போர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கை சமீபத்தில் வெளியிட்ட, இந்தாண்டுக்கான தனது ‘30 அண்டர் 30’ விருது பெறுவோர் பட்டியலில் சாய் பல்லவியையும் இணைத்திருந்தது. முப்பது வயதுக்கு உட்பட்ட முப்பது சாதனையாளர்களில் தேர்வான ஒரே நடிகை சாய் பல்லவிதான்.  இந்த தகவல் வெளியானதும், ஏற்கனவே சாய் பல்லவியின் நடிப்பு தொழில் மீது கடுப்பிலிருந்த அவரது சாதி பெரிய மனிதர்கள் சிலர் ‘இதுல பெருமைப்பட என்ன இருக்குது? இது நம்ம சாதிக்கு அவமானம். உலகமே பாக்குற படி அப்படியும் இப்படியுமா ஆடுறது! என்ன பெரிய சாதனை? நம்ம சமுதாய பொண்ணுங்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது. அன்பா, அறிவா, அடக்கமா கடவுளுக்கு பக்தியோட இருக்க வேண்டியவங்க அவங்க. சினிமா ஆட்டமும் வேண்டாம், அதுல கிடைக்கிற புகழும் வேண்டாம்.’ என்று சோஷியல் மீடியாவில் கருத்துப் போட்டாங்க. ஆனால் சாய் பல்லவிக்கு ஆதரவாக களமிறங்கிய அச்சமுதாய் இளைஞர்கள் பலரோ ”என்ன பிற்போக்குத்தனமா இருக்கீங்க இன்னமும். சாய் பல்லவி நம்ம சமுதாயத்தோட பெருமை. ‘நடனம்’தான் நம்ம சாதியோட அடையாளமே.  இன்னைக்கு அதை உலகம் அறிய வெச்சிருக்குறா சாய். அவளை நாம கொண்டாடணும். அதைவிட்டுட்டு பெண்ணடிமைத்தனமா பேசுறது அகம்பாவம். கோடிக்கணக்குல சம்பளம் தர்றேன்னு சொல்லியும் கூட சிகப்பழகு க்ரீம் விளம்பரத்தில் நடிக்க மறுத்த பொண்ணு. தேவையில்லாத விளம்பரங்களில் நடிச்சு காசு பார்த்துட்டு, மக்களை குழப்ப விரும்பாத நடிகை அவ. இவ்வளவு நேர்மையான நடிகை, நம்ம சாதியை சேர்ந்தவர் அப்படிங்கிறதுக்காக நாம பெருமைப்படணும். இந்த விருதுக்காக நம்ம சாதி சார்பா அவளுக்கு விழா எடுக்கணும்.” என்று திருப்பி அடித்தனர் சோஷியல் மீடியாவில். 


ஆனால் அப்போதும் மனம் மாறாத அச்சமுதாய பெரியவர்கள் சிலரோ “இது சரிப்படாது. இன்னைக்கு இந்த பொண்ணோட செயலை இப்படியே விட்டோம்னா, நாளைக்கு இன்னும் பல பேர் என்னென்னவோ பண்ணி சாதி பெயரை கெடுக்க ஆரம்பிச்சுடுவாங்க. சாய் பல்லவி இதுக்கு முன்னுதாரணமா போயிடுவா போல இருக்குது. அதனால தொடக்கத்துலேயே சில கட்டுப்பாடுகளும், நடவடிக்கைகளும் எடுத்துட்டாக்க தேவையில்லாத பிரச்னைகள் எதிர்காலத்துல உருவாகாது.  அதனால சாய் பல்லவி குடும்பத்துக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். சமுதாய நிகழ்வுகளுக்கு சாய் பல்லவியும் அவ குடும்பமும் வர்ற விஷயத்துலேயும், கோயில் விழாக்களில் அவங்க கலந்துக்குற விஷயத்துலேயும் சில தடைகள் போடுறது பத்தி கூட யோசிக்கலாம். முதல் தப்பு நடக்குறப்ப கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் அடுத்தடுத்து தப்பு நடக்காம இருக்கும். 
உலகமே தெரிஞ்சு வெச்சிருக்கிற நடிகைங்கிறதுக்காக நம்ம சாதி ஒண்ணும் பணிஞ்சு போக வேண்டிய அவசியமில்லை!’ அப்படின்னு பேசி முடிவு பண்ணியிருக்காங்க. அநேகமா சாய் பல்லவிக்கு எதிரா  அவங்க சமுதாய பெரியவங்க சில முடிவெடுக்கலாம்னு தெரியுது. இதை அதே சமுதாயத்தை சேர்ந்த  பல பெண்களும், கணிசமான இளைஞர்களுமே எதிர்த்து ‘இது சாய்பல்லவிக்கு எதிரான உள் சமுதாய தீண்டாமை!’ன்னு போர்க்கொடி தூக்கியிருக்காங்க. 
சூழல் இப்போதைக்கு இப்படியிருக்குது. இது எங்கே போய் முடியும்ணு தெரியலை.” என்கின்றனர். 


ஆனால் நீலகிரி மாவட்டத்தில், சாய்பல்லவி சேர்ந்த சமுதாய தரப்பில் விசாரித்துப் பார்த்தால் “சாய் பல்லவியோட நடிப்பு உள்ளிட்ட விஷயங்களில் அதிருப்தி அடைஞ்சு எங்க சமுதாய பெரிய ஆட்கள் சிலர் வெளிப்படையா கருத்து தெரிவிச்சது உண்மைதான். ஆனால் இப்படி சாதியை விட்டு தள்ளி வைக்கிறாங்கன்னு எல்லாம் பெரிய வார்த்தை சொல்லி, வதந்தியை கிளப்பியிருக்கிறது மிருகத்தனமான செயல்.  எங்க சமுதாயத்துக்கு அப்படிப்பட்ட வெறித்தனமான குணமெல்லாம் என்னைக்குமே கிடையாது. அடுத்த சமுதாய மக்கள்கிட்டேயே பாகுபாடு இல்லாம, அன்பா பழகும் நாங்க எப்படி எங்க சாதி பொண்ணு மேலே தீண்டாமையெல்லாம் காட்டுவோம். அக்கிரமமான விமர்சனம் இது.” என்கிறார்கள். அய்யா சாமி! நீலகிரி மலைக்குள்ளே என்னதான் நடக்குது?

click me!