பண கஷ்டம் தாங்க முடியாமல் அதிரடி முடிவு எடுத்த நடிகை டிஸ்கோ சாந்தி...!

 
Published : Jun 19, 2018, 04:51 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
பண கஷ்டம் தாங்க முடியாமல் அதிரடி முடிவு எடுத்த நடிகை டிஸ்கோ சாந்தி...!

சுருக்கம்

disco shanthi again enter in cinema

தமிழ் திரையுலகில், கவர்ச்சி நடனங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை டிஸ்கோ சாந்தி. இவர் மறைந்த நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகள் ஆவார். தமிழில் 'உதய கீதம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், இதைத்தொடர்ந்து தெலுங்கு, மலையாளம்,கன்னடம் ஆகிய 4 மொழிகளிலும் தன்னுடைய கவர்ச்சி நடனத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். மேலும் சில திரைப்படங்களில் குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.

இவர் பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரி என்பவரை காதலித்து 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். தன்னுடைய காதல் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்து இவரின் கணவர் மரணம். நடிகர் ஸ்ரீஹரி கடந்த 2013 ஆண்டு மாரடைப்பு காரணமாக இறந்தார். ஸ்ரீஹரி நடிகர் விஜய் நடித்த, வேட்டைகாரன் படத்தில் நேர்மை தவறாத போலிஸ் அதிகாரியாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தன்னுடைய 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்த டிஸ்கோ சாந்தி தன்னுடைய கணவரின் இழப்பை தாங்க முடியாமல் சில காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவருடைய கல்லீரல் பாதிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். இதனால் இவரை குடும்பத்தினர் சிங்கப்பூர் அழைத்து சென்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். பின் டிஸ்கோ சாந்தி முற்றிலும் குணமடைந்தார்.

இந்நிலையில், தற்போது இவர் பண கஷ்டத்தால் மிகவும் அவதி பட்டு வருவதால் மீண்டும் திரையுலகில் கால் பதிக்க முடிவு செய்துள்ளாராம். ஆனால் நல்ல கதை மற்றும் கதாப்பாத்திரம் அமைந்தால் மட்டுமே இவர் நடிப்பார் என கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!