அனுஷ்காவுடன் திருமணமா...? முதல் முறையாக வாய்திறந்த பிரபாஸ்..!

 
Published : Jun 19, 2018, 03:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
அனுஷ்காவுடன் திருமணமா...? முதல் முறையாக வாய்திறந்த பிரபாஸ்..!

சுருக்கம்

prabas about marriage with anushka

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. இவர் 36வயதை கடந்த பின்பும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல், தொடர்ந்து திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.

கடைசியாக மிகவும் புதுமையான வேடத்தில் 'பாகுமதி' படத்தில் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து புதிதாக எந்த திரைப்படத்திலும் இவர் கமிட் ஆகவில்லை. இவருக்கு வயது அதிகரித்து விட்டதால் இயக்குனர்கள் இவரை ஒதுக்குவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என அனுஷ்கா பெற்றோர் அவருக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்கள். 

மேலும் ஏற்கனவே நடிகர் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா காதலித்து வந்ததாக கிசுகிசுக்க்கப்பட்ட நிலையில், இருவரும் இணைத்து  பாகுபலி படத்தில் நடித்து அனைவரும் அறிந்தது தான்.

இதனால் இவர்கள் பாகுபலி படத்தின் ரீலீஸ்க்கு பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று செய்திகள் வெளியானது. 
இதைதொடர்ந்து தற்போது முதல் முறையாக அனுஷ்கா பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகர் பிரபாஸ் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், 'என்னையும் அனுஷ்காவையும் பலர் இணைத்து பேசி வருகிறார்கள். எங்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள். எனது சொந்த வாழ்க்கை பற்றி வெளிப்படையாக நான் பேச விரும்ப வில்லை. எனக்கு திருமணம் நடக்கும்போது அதை வெளிப்படையாக அறிவிப்பேன் என கூறியுள்ளார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!