
ஒரே நேரத்தில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள் பற்றி, அப்டேட் கொடுத்து, தல அஜித் மற்றும் சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.
'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பின், நடிகர் அஜித், இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் காம்பினேஷனில் உருவாகி வருகிறது 'வலிமை' திரைப்படம். இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். வலிமை திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் எப்போது கிடைக்கும், என எந்த பிரபலத்தை பார்த்தாலும், ரசிகர்கள் முதல் கேள்வியாக வலிமை அப்டேட் தெரிந்தால் கூறுங்கள் என கேட்டு வருகிறார்கள். ரசிகர்களின் ஆவலை கண்டு, சில பிரபலங்களும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை கூற அது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி விடுகிறது.
கடந்த முறை யாரும் எதிர்பாராத விதமாக 'வேற மாறி' பாடலை வெளியிட்ட படக்குழு, எப்போது அடுத்த பாடலை வெளியிடும் என தல ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர். ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்புக்கு தீனி போடும் விதமாக, டபுள் டமாக்கா செய்தியை வெளியிட்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. வலிமை படத்தின் இரண்டாவது பாடலை யுவன் ஷங்கர் ராஜா தயார் செய்து விட்டதாகவும் விரைவில் இது குறித்த தகவல் வெளியாகும் என கூறியுள்ளார்.
அதே போல் வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள, 'மாநாடு' படத்தின் இரண்டாவது சிங்கிலும் தற்போது தயாராகிவிட்டதாக சிம்பு ரசிகர்களுக்கு ஸ்வீட் நியூஸ் கூறியுள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி நடிகர்களின் அப்டேட் கொடுத்ததற்கு சில ரசிகர்கள் வெங்கட் பிரபுவுக்கு தங்களுடைய நன்றியை தெரிவித்து வருகிறார்கள் . மேலும் இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.