ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர் வீட்டிற்கு... திடீர் விசிட் அடித்த சூப்பர் ஸ்டார்... வைரல் வீடியோ!

Published : Aug 12, 2021, 05:10 PM IST
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற  ஹாக்கி வீரர்  வீட்டிற்கு... திடீர் விசிட் அடித்த சூப்பர் ஸ்டார்... வைரல் வீடியோ!

சுருக்கம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற, இந்திய ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷின் வீட்டிற்கே சென்று, நடிகர் மம்மூட்டி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற, இந்திய ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷின் வீட்டிற்கே சென்று, நடிகர் மம்மூட்டி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மலையாள படங்களில் ஓய்வு இல்லாமல் நடித்து வரும் நடிகர் மம்மூட்டி, கேரள மாநில இளைஞர்களின் துடிப்பான செயலுக்கு எப்போதும் தன்னுடைய ஆதரவை தெரிவித்து வருபவர். அதே போல் தன்னுடைய ரசிகர்களின் ஆக்கபூர்வமான செயல்களை ஊக்குவித்து, தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில், கேரள மாநிலத்தில் இருந்து சென்று, சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ 2020  ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு, இந்திய ஹாக்கி விளையாட்டில் வெண்கல பதக்கம் வென்றுள்ள விளையாட்டு வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷின் வீட்டுக்கே சென்று தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் மலையாள நடிகர் மம்மூட்டி. 


இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், இன்று காலை  கிழக்கம்பாளம் பள்ளிக்கரையில் உள்ள ஸ்ரீஜேஷின் வீட்டுக்கு மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி திடீர் என சென்று தன்னுடைய வாழ்த்தை தெரிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்போது கேரளாவின் 49 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்து,  ஒலிம்பிக் பதக்கம் வென்றதற்காக ஸ்ரீஜேஷை பாராட்டியுள்ளார். அப்போது ஸ்ரீஜேஷ் தனது வெண்கலப் பதக்கத்தை மம்மூட்டியிடம் கட்டி மகிழ்ந்தார்.

மம்மூட்டியின் ஆச்சரியமான வருகை குறித்து தெரிவித்துள்ள ஸ்ரீஜேஷ், இவ்வளவு மிகப்பெரிய நடிகரை சந்தித்தபோது மிகவும் பதட்டமாக இருந்ததாக கூறியுள்ளார். மம்மூட்டியிடம் பூங்கொத்து வாங்கும் போது கூட கைகள் நடுங்கியதால், பூங்கொத்தை கீழே தவற விட்டிருப்பேன். ஒலிம்பிக் பதக்கம் பெறும் போது கூட இப்படி உணரவில்லை என்றும் ஸ்ரீஜேஷ் கூறியுள்ளார்.

மம்மூட்டி தங்களது வீட்டிற்கு வருவதாக யாரும் தெரிவிக்கவில்லை,  தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து  சில பிரதிநிதிகள் வருவார்கள் என்று தான் சொன்னார்கள். ஆனால் நான் மம்மூட்டியை பார்த்தபோது, ​​ ஆச்சரியப்பட்டேன், என்னுடைய குடும்பத்தினரும் இதுவரை அந்த ஆச்சர்யத்தில் இருந்து மீளவில்லை என உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.

"

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!