முப்பதை மணந்த அறுபது..!!! நடிகை ஷெர்லியை மணந்தார் வேலுபிரபாகரன்..

 
Published : Jun 03, 2017, 01:24 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
முப்பதை மணந்த அறுபது..!!! நடிகை ஷெர்லியை மணந்தார் வேலுபிரபாகரன்..

சுருக்கம்

director veluprabaharan married actress sherly

இயக்குனர் வேலுபிரபாகரன் 'நாளைய மனிதன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து 'அதிசய மனிதன்', 'உருவம்', 'பதினாறு' போன்ற பல படங்களை இயக்கி, நடித்தும் உள்ளார்.

இந்நிலையில் இவர் இயக்கத்தில் உருவான "ஒரு இயக்குனரின் காதல் டைரி" திரைப்படம் நேற்று வெளியானது. இந்த திரைப்படத்தை  இயக்கி, எழுதி, நடித்துள்ள வேலுபிரபாகரன்... இப்படம் இயக்குனர்களின் மறுமுகம் பிரதிபலிக்கும் அளவிற்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில்  கூறி இருந்தார்.

தற்போது 60  வயதை எட்டியுள்ள இவர்,  இவருடைய இயக்கத்தில் 2004 எடுக்கப்பட்ட திரைப்படமான "வேலு பிரபாகரின் காதல் கதை" என்கிற படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த 30 வயது நடிகையும், விளம்பர படங்களில் நடித்தவருமான ஷெர்லி தாஸை திருமணம் செய்ய உள்ளதாக சில தினங்களுக்கு முன் அறிந்தார்.

இவர் சொன்னது சொன்னது போலவே இன்று இயக்குனர் வேலுபிரபாகரனும், நடிகை ஷெர்லி தாஸும், சென்னை லீ மேஜிக் லேண்டர்ன் திரையரகத்தில், 10 : 25 மணிக்கு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமணம் செய்துக்கொண்டனர்.

ஏற்கனவே இவர்கள் இருவரும், லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் இருவரும் முறைப்படி திருமணம் செய்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடிகைகளை பார்த்ததும் ஈ போல் மொய்க்கும் ரசிகர்கள்... நிதி அகர்வாலை தொடர்ந்து சமந்தாவுக்கும் இந்த நிலைமையா?
கிறிஸ்துமஸ் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & OTT-யில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?