பிரபல இயக்குனர் சுசி கணேசன் குடும்பத்தில் நேர்ந்த அதிர்ச்சி மரணம்!

Published : Nov 08, 2023, 01:08 PM IST
பிரபல இயக்குனர் சுசி கணேசன் குடும்பத்தில் நேர்ந்த அதிர்ச்சி மரணம்!

சுருக்கம்

பிரபல இயக்குனர் சுசி கணேசன் மாமனாரும், முன்னாள் மாவட்ட ஆட்சியருமான சண்முகவேலு உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ள சம்பவம் அவரின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

தமிழில் பிரசன்னா, கனிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான '5 ஸ்டார்' படத்தின் மூலம், இயக்குனராக அறிமுகமானவர் சுசி கணேசன். இவரின் முதல் படமே, தமிழ் நாடு ஸ்டேட் விருதை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கிய விரும்புகிறேன், திருட்டுப்பயலே, திருட்டுப்பயலே 2, கந்தசாமி போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் தமிழில் தான் இயக்கி வெற்றிபெற்ற, திருட்டு பயலே படத்தை இவர் ஹிந்தியில் ரீமேக் செய்த நிலையில், அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால், தற்போது Dil Hai Gray என்கிற பெயரில், திருட்டுப்பயலே 2 படத்தையும் ரீமேக் செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விரைவில் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சுசி கணேசன் வீட்டில் ஏற்பட்டுள்ள மரணம், அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சுசி கணேசனின் மனைவி மஞ்சரியின் தந்தை சண்முகவேலு கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 85 வயதாகும் இவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

Ponni: விஜய் டிவி சீரியலில் இருந்து அதிரடியாக வெளியேறிய பிரபல நடிகை! இனி அவருக்கு பதில் இவர் தான்!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

 

இவர் , திண்டுக்கல் மாவட்டத்தில் டெபுடி கலெக்டராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் . இலங்கை அகதிகள் திவிரமாக இருந்த காலகட்டத்தில் அப்பகுதி தாசில்தாராக பணியாற்றி பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிச் சடங்குகள், அவரது சொந்த ஊரான காரைக்குடியில் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பலர், தங்களின் ஆறுதல்களை தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்
தன்னோட வாழ்க்கைக்கே வழிய காணோம்; இதுல தங்கச்சிக்கு அட்வைஸ் பண்ணும் தங்கமயில்